dinamalar telegram
Advertisement

சீக்கியர்கள் புனித நூலை அவமதித்ததால் தொழிலாளி கொலை? ; போலீஸ் விசாரணை

Share
சண்டிகர்-ஹரியானாவில் விவசாயிகளின் போராட்டம் நடக்கும் பகுதிக்கு அருகே, கை துண்டிக்கப்பட்ட நிலையில், ஒரு ஆணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சீக்கியர்களின் புனித நுாலை அவமதித்ததற்காக இந்த நபர் கொல்லப்பட்டிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.ஹரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.இங்குள்ள சோனிபட் மாவட்டத்தின் குண்டலி பகுதியில் விவசாயிகளின் போராட்டம் நடந்து வரும் பகுதிக்கு அருகே, நேற்று ஒரு ஆணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இரும்பு தடுப்பில், கை துண்டிக்கப்பட்டு, ரத்தம் கசிந்து காய்ந்த நிலையில் அந்த உடல் இருந்தது. உடலுக்கு அருகே ஆயுதம் ஏந்திய சீக்கிய அமைப்பினர் சிலர் காணப்பட்டனர்.இது தொடர்பான காட்சிகள் அடங்கிய 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.போலீசார், அந்த உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சீக்கியர்களின் புனித, 'குரு கிரந்த் சாகிப்' புத்த கத்தை அவமதித்த குற்றத்திற்காக, அந்த நபரை 'நிஹாங்' என்ற சீக்கிய அமைப்பினர் கொன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொல்லப்பட்ட லக்பிர் சிங், 35, பஞ்சாபை சேர்ந்த தொழிலாளர் என கூறப்படுகிறது.இதற்கிடையே, 'நிஹாங்' அமைப்பின் உறுப்பினர் ஒருவர் போலீசாரிடம் சரண் அடைந்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (12)

  • மதுமிதா -

    அடுத்தவர் மத மன உணர்வை கோச்சை படுத்துபவர்கள் வன்முறேயானவர்களே.

  • Anand - chennai,இந்தியா

    இன்னொரு ப்ளூஸ்ட்டார் ஆபரேஷன் செய்யவேண்டிய நேரம் வந்துவிட்டது.... கூடவே இந்த ராகேஷ் டிகாயத், யோகேந்திர யாதவ் போன்றவர்களையும் சுட்டு கொல்லவேண்டும்....... அதற்கு முன் இத்தாலி மாபியாக்களை இங்கிருந்து விரட்டியடிக்கவேண்டும்.

  • ராஜா -

    செத்தவன் குடும்பத்தை கட்டிபிடிக்க பப்பு அண்ட் பப்பி வரலே? செஞ்சா குடுமியை அத்துருவானுங்க...

  • DVRR - Kolkata,இந்தியா

    இதில் தவறு ஒன்றுமில்லை ஏன் ???அவர்கள் இந்துக்கள் அல்ல அவர்கள் முஸ்லிம்கள் வழிமுறையை தொடர்கின்றனர் அப்படித்தானே அதாவது அவர்கள் காலிஸ்தானியர்கள்???இதுவே தினம் தினம் நடப்பது இந்து கடவுளை கேலி செய்வார்கள் இந்து புத்தகங்களை ஏளனம் செய்வார்கள் ஆனால் இந்துக்கள் செகுலர் டோலெராண்ட் ????????

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    இங்க இந்து கோவில்களை எவ்வளோ கேவல படுத்தினாலும் நாங்க மன்னிப்போம் மறப்போம்...ஹிஹிஹி

Advertisement