dinamalar telegram
Advertisement

ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தவில்லை தி.மு.க., மீது எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

Share
ஏற்காடு:''தி.மு.க., அரசு, ஜனநாயக முறைப்படி உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை,'' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.

ஏற்காட்டில் அ.தி.மு.க.,வினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:நம் ஆட்சியில், ஏற்காடு மக்கள் வசதிக்கும், சுற்றுலா பயணியர் வசதிக்கும், சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அ.தி.மு.க., ஆட்சியில், உள்ளாட்சி தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்தினோம்.

தி.மு.க., ஆட்சியில், அப்படி நடத்தாமல், வாக்காளருக்கு, 1,000 ரூபாய், தட்டு, சேலை போன்றவற்றை கொடுத்து வெற்றி பெற்றனர்.சில இடங்களில் வெற்றி பெற்ற, அ.தி.மு.க., வேட்பாளரை தோற்றதாக அறிவித்தும், அதிக அளவில் ஓட்டுகள் பெற்ற, அ.தி.மு.க., வேட்பாளரை வெகு நேரமாக காக்க வைத்து, பின் வேறு வழியின்றி வெற்றியை அறிவித்து உள்ளனர்.

மேலும், கடந்த சட்டசபை தேர்தல் முடிந்ததும், கொரோனா தாக்கம் அதிகரிப்பால், கட்சி கூட்டம் நடத்த அரசு தடை விதித்தது. இதனால், நன்றி தெரிவிக்க முடியாமல் போனது. தற்போது, இந்நிகழ்ச்சி மூலம், சட்டசபை தேர்தலில் ஏற்காடு எம்.எல்.ஏ., சித்ரா அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற உழைத்த நிர்வாகிகள், கட்சி தொண்டர்களுக்கு நன்றி.இவ்வாறு அவர் பேசினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement