dinamalar telegram
Advertisement

மீனவர்களை மீட்க வலியுறுத்தல் டில்லி சிறப்பு பிரதிநிதி தகவல்

Share
Tamil News
நாகப்பட்டினம்:தமிழக மீனவர்களை உடனடியாக மீட்க தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார் என்று டில்லி சிறப்பு பிரதிநிதி விஜயன் தெரிவித்தார்

நாகையில் இரண்டு படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை, நடுக்கடலில் நேற்று முன்தினம் அதிகாலை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அந்நாட்டு மீன் வளத்துறை விசாரணைக்கு பின் யாழ்ப்பாணம், ஊர்க்காவல் நீதிமன்றம் வரும் 28ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இந்நிலையில் நாகை, அக்கரைப்பேட்டையில் மீனவர் குடும்பத்தினரை, டில்லி சிறப்பு பிரதிநிதி விஜயன் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது அவர் கூறுகையில்,'மீனவர்கள 23 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்த தகவல் கிடைத்தவுடன் முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மற்றும் வெளியுறுத்துறை அமைச்சரிடம் தெரிவித்து உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். மிக விரைவில் மீனவர்களை மீட்டு ஒப்படைப்போம். கடல் பகுதியில் மீனவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement