dinamalar telegram
Advertisement

மீனவர்களை விடுவிக்க அமைச்சர் கடிதம்

Share
சென்னை:இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள, தமிழக மீனவர்கள் 23 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன், மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நாகை, காரைக்கால், மயிலாடுதுறை பகுதிகளை சேர்ந்த 66 மீனவ கிராமங்களில் இருந்து, மத்திய இணை அமைச்சர் முருகனுக்கு, மீனவர்களை விடுவிக்க கோரி, கோரிக்கை மனுக்கள் வந்துள்ளன.

இதைத் தொடர்ந்து, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள, 23 மீனவர்கள்; அவர்களின் இரண்டு படகுகளையும் உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இணை அமைச்சர் முருகன் நேற்று கடிதம் எழுதியுள்ளார்.மீனவர்களை முன்கூட்டியே விடுவிக்க, தன் தரப்பில் இருந்து அனைத்து உதவிகளையும் செய்வதாகவும், முருகன் உறுதி அளித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement