dinamalar telegram
Advertisement

பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு கூடாது:பா.ஜ., செய்தி தொடர்பாளர்

Share
சென்னை:'தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க விதிக்கப்படும் நேர கட்டுப்பாடுகளை அகற்ற வேண்டும்' என தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:பண்டிகைகளின் போது, குறிப்பாக தீபாவளிக்கு, இந்திய மக்கள் அனைவரும் பட்டாசு வெடித்து கொண்டாடுவர். ஆகவே, பட்டாசுகளை தடை செய்ய வேண்டாம் என தமிழக முதல்வர் ஸ்டாலின், நான்கு மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதி >ள்ளார். இதை வரவேற்கிறோம்.

அதே நேரத்தில், தமிழகத்தில் சில ஆண்டுகளாக தீபாவளியின் போது பட்டாசுகள் வெடிக்க விதிக்கப்படும் நேர கட்டுப்பாடுகளை அகற்ற வேண்டும்; மக்கள் முழுதுமாக பண்டிகையை கொண்டாட ஆவண செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement