dinamalar telegram
Advertisement

எதிர்க்கட்சியினர் ஓரணியில் திரண்டு போராட வேண்டும்

Share
சென்னை:'பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், அதற்கு தீர்வு காணவும், எதிர்கட்சிகள் ஓரணியில் திரண்டு போராட வேண்டும்' என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:கொரோனா தொற்று பரவலாலும், பொருளாதார தேக்க நிலையாலும், மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி, மக்கள் மீது சுமையை ஏற்றி வருகிது.விலை உயர்வை எதிர்த்து, நாடு முழுதும் காங்கிரஸ் பல போராட்டங்களை நடத்தி எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

ஆனால், அந்த எதிர்ப்பை கடுகளவும் பொருட்படுத்தாமல், தொடர்ந்து பெட்ரோலிய பொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்தி வருகிறது.இந்த விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை அலட்சியப் போக்குடன் மத்திய அரசு ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கையை எதிர்த்து, மக்கள் நலனில் அக்கறையுள்ள அனைத்து எதிர்கட்சிகளும் ஓரணியில் திரண்டு போராடுவதன் வாயிலாக, மக்களின் பாதிப்புகளுக்கு தீர்வு கிடைக்கும்.இவ்வாறு அழகிரி கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement