dinamalar telegram
Advertisement

ஆதிதிராவிடர் ஆணைய நிர்வாகிகள் நியமனம்

Share
சென்னை:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்திற்கு தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சட்ட பூர்வமான உரிமைகளை பாதுகாக்கவும் முக்கியமான பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நல ஆணையம் என்ற தன்னாட்சி அமைப்பை அரசு உருவாக்கி உள்ளது.இதற்கான சட்டமும் இயற்றப்பட்டு உள்ளது.

தற்போது ஆணைய தலைவராக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சிவகுமார் துணைத் தலைவராக புனித பாண்டியன் உறுப்பினர்களாக வழக்கறிஞர் குமாரதேவன் எழில் இளங்கோவன் லீலாவதி தனராஜ் வழக்கறிஞர் இளஞ்செழியன் முனைவர் ரகுபதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள். ஆதிதிராவிடர் பழங்குடியினரின் சட்டபூர்வ உரிமைகளை பாதுகாக்கவும் முக்கியமான பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் உரிய ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் நிர்வாகிகள் அவ்வப்போது அரசுக்கு வழங்குவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement