dinamalar telegram
Advertisement

அ.தி.மு.க., பொன்விழா சிறப்பு மலர் வெளியீடு

Share
சென்னை:அ.தி.மு.க.,வின் 50வது ஆண்டு துவக்க விழாவில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் பொன்விழா சிறப்பு மலரை வெளியிட உள்ளனர்.

அ.தி.மு.க., தலைமை அறிக்கை:அ.தி.மு.க., துவங்கி, 49 ஆண்டுகள் நிறைவடைந்து, 17ம் தேதி (நாளை), 50வது ஆண்டு துவங்குகிறது. இதை கொண்டாடும் வகையில், தலைமையகத்தில் அன்று காலை, 10:00 மணிக்கு, பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர், எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவிக்கின்றனர்.

கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கி, கட்சியின் பொன்விழா சிறப்பு மலரை வெளியிட உள்ளனர். அதைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா நினைவிடங்களுக்கு நேரில் சென்று, மலர் துாவி மரியாதை செலுத்த உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement