dinamalar telegram
Advertisement

சசிகலா வீண் முயற்சி ஜெயகுமார் சாடல்

Share
Tamil News
சென்னை:''ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா செல்வது வீண் முயற்சி. அதனால், கட்சியில் எவ்வித பிளவையும், அவரால் ஏற்படுத்த முடியாது,'' என, முன்னாள் அமைச்சர் ஜெய குமார் கூறினார்.

அவர் அளித்த பேட்டி:எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, நாகப்பட்டினம் மீனவர்கள் 23 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இது தொடர்கதையாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, இதற்கு தீர்வு காண வேண்டும். சென்னையில், ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா செல்வது, வீண் முயற்சி. அதனால், கட்சியில் எவ்வித பிளவையும், அவரால் ஏற்படுத்த முடியாது.

ஜெயலலிதா மட்டுமே அம்மா; மற்றவர் எல்லாம் சும்மா. 'அம்மா' என்ற வார்த்தையை, சசிகலா பயன்படுத்தக் கூடாது.எந்தவித சட்ட உரிமையும் இல்லாமல், அ.தி.மு.க., கொடியையும், பொதுச் செயலர் என்ற பெயரையும், சசிகலா பயன்படுத்தி வருகிறார். சசிகலாவை எதிர்த்து போராட்டம் செய்து, அவரை பெரிய ஆளாக்க விரும்பவில்லை.

தமிழகத்தில் இரண்டு தீய சக்திகள் உள்ளன. ஒன்று, தி.மு.க., மற்றொன்று, சசிகலா குடும்பம். எந்த தீய சக்தியாலும், அ.தி.மு.க., தொண்டர்கள் ஒற்றுமையை சீர்குலைக்க முடியாது. உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க.,விற்கு பின்னடைவு இல்லை. தேர்தல் நேர்மையாக, ஜனநாயக முறையில் நடைபெற்றிருந்தால் வெற்றி, தோல்வி சமமாக இருந்திருக்கும். தி.மு.க.,விற்கு கிடைத்த வெற்றி, அதர்மத்திற்கு கிடைத்த வெற்றி.இவ்வாறு ஜெயகுமார் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement