dinamalar telegram
Advertisement

வெளிநாடு படிக்கச் சென்ற மகனை ஆஜர்படுத்த வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு

Share
மதுரை:மருத்துவப் படிப்பிற்காக பிலிப்பைன்ஸ் சென்ற மகன் மாயமானதாகவும் ஆஜர்படுத்தக்கோரியும் தாக்கலான வழக்கில்,'அங்கு அவர் மனைவியுடன் வசிக்கிறார். மகனை சந்திக்க மனுதாரர் அங்கு செல்லும்போது இந்திய துாதரகம் உதவி செய்ய வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தர விட்டது.

மதுரை பாண்டியராஜன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு: எனது மகன் விக்னேஷ்வரன் 26. மருத்துவப் படிப்பிற்காக 2016 ல் பிலிப்பைன்ஸ் சென்றார். அவர் 2018 ல் மாயமானார். மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். மகனைப் பற்றி எந்த தகவலும் இல்லை. அவரை ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் வி.பாரதிதாசன், ஜெ.நிஷாபானு அமர்வு விசாரித்தது.மத்திய அரசுத் தரப்பு: பிலிப்பைன்ஸ் டாவோ சிட்டியிலுள்ள ஒரு மருத்துவக் கல்லுாரி படிப்பில் விக்னேஷ்வரன் சேர்ந்தார். பின் படிப்பை கைவிட்டு பிலிப்பைன்ஸ் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மிண்டனாவோவில் வசிக்கிறார். அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என மணிலாவிலுள்ள இந்திய துாதரகம் தெரிவித்தது.

தொடர்பு கொள்ள மற்றும் கண்டுபிடிக்க மனுதாரருக்கு அனைத்து உதவிகளையும் துாதரகம் வழங்கும்.

நீதிபதிகள்: பிலிப்பைன்ஸ் மிண்டனாவோவில் மனுதாரர் மகன் மனைவியுடன் வசிக்கிறார். அவர் யாராலும் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்படவில்லை. ஆதலால் இதில் மேலும் உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை.மகனை சந்திக்க பிலிப்பைன்ஸ் செல்ல மனுதாரர் விரும்புகிறார். அங்கு செல்லும்பட்சத்தில் மகனை சந்திக்க, மனுதாரருக்கு இந்திய துாதரகம் அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும். வழக்கு முடிக்கப்படுகிறது, என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement