தேவதானப்பட்டி:தேனிமாவட்டம் தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணையில் உதவி பொறியாளர் அலுவலகத்தில் முன்னாள் முதல்வர்கள் காமராஜர், பக்தவச்சலம் நாணயங்களை இட்ட 'கல்லாபெட்டி' பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் தலையாறு, வரட்டாறு, மூலாறுகளில்பெய்யும் மழை, தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, கணவாய்பட்டி,வத்தலக்குண்டு, குன்னுவாரன்கோட்டை, சிவஞானபுரம் வழியாக மஞ்சளாறு செல்கிறது. ஆற்றுப்பாசனத்தில் விவசாயம் செய்யப்பட்டது. இது விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை.இதனால் அணை கட்ட முடிவு செய்யப்பட்டது.
முன்னாள் முதல்வர் காமராஜர் 1963 செப்.,16ல் மஞ்சளாறு அணைக்கு அடிக்கல் நாட்டினார். கட்டுமான பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க திண்டுகல்லில் இருந்து 52 கிலோ எடையுள்ள கல்லா பெட்டி(பணப்பெட்டி) வரவழைக்கப்பட்டது. இதற்கும் பூஜை செய்து முதன்முதலாக 50 காசு சில்லரை நாணயங்களாக ரூ.10 ஐ காமராஜர் கல்லாபெட்டியில் இட்டு அதன் சாவியை நீர்பாசனத்துறையினரிடம் ஒப்படைத்தார். அதன்பிறகு அந்த பெட்டியில் 25 காசு நாணயம் முதல் பத்து ரூபாய் நோட்டுகள் வரை பாதுகாப்பாக வைத்து சம்பளம் வழங்கப்பட்டது.
கட்டுமானத்துக்கு பிறகு 1967 ஜன. 16ல் அப்போதைய முதல்வர் பக்தவச்சலம் பாசனத்திற்கு அணையை திறந்து வைத்தார். அவரும் கல்லா பெட்டியில் ரூ.50போட்டார்.இந்த பொக்கிஷமான கல்லா பெட்டி தற்போது மஞ்சளாறு உதவி பொறியாளர் அலுவலகத்தில் நாற்காலியில் சங்கிலி கட்டி பாதுகாக்கப்பட்டு வருகிறது.
தற்போது சம்பளமாக வங்கிகளில் ஆன்லைனில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டாலும் இந்த கல்லாபெட்டி பொக்கிஷமாக பாதுகாக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பாசனத்திற்கு அணை திறக்கப்படும் நாட்களில் கல்லாபெட்டிக்கும் பூஜை நடக்கும். அணை பாசனத்திற்காக திறக்கப்பட்டதையொட்டி பூஜை நடந்தது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!