dinamalar telegram
Advertisement

முதல்வர் அறிவித்தும் அனுமதி இல்லை: ஏமாற்றத்துடன் திரும்பிய சதுரகிரி பக்தர்கள்

Share
Tamil News
வத்திராயிருப்பு:முதல்வர் அறிவிப்பால் சதுரகிரி வந்த பக்தர்களுக்கு தரிசனம் செய்ய போலீஸ், வனத்துறையினர் அனுமதிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதை கண்டித்து ஹிந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நடந்த நவராத்திரி வழிபாட்டிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கோயில்களில் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

இதை நம்பி நவராத்திரி வழிபாட்டின் கடைசி நாளன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் தரிசனம் செய்ய வெளியூர் பக்தர்கள் காலை 6:00 மணி முதல் வர துவங்கினர். முதல்வர் அறிவிப்பு ஒருபுறமிருந்தாலும் விருதுநகர், மதுரை கலெக்டர் தரிசன தடை அறிவிப்பு நடைமுறையில் இருப்பதால் பக்தர்கள் மலையேற போலீஸ், வனத்துறையினர் அனுமதி மறுத்தனர்.

ஏமாற்றமடைந்த பக்தர்கள் தாணிப்பாறை கேட் முன் காத்து கிடந்தனர். இதன் பின் கேட் வாசலில் சூடம் ஏற்றி கோயிலை நோக்கி வணங்கி திரும்பினர்.இதையறிந்த ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் யுவராஜ் தலைமையில் அமைப்பினர் தாணிப்பாறை வந்தனர். அவர்களை தாணிப்பாறை விலக்கு செக்போஸ்டில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஸ்ரீவி., டி.எஸ்.பி., சபரிநாதன், வத்திராயிருப்பு வருவாய்த்துறை அதிகாரிகள் பேசினர். வரும் பிரதோஷ வழிபாட்டுக்கு பக்தர்கள் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதை ஏற்ற ஹிந்து முன்னணியினர் தாணிப்பாறை கோயில் நுழைவு வாசலில் சூடம் ஏற்றி வணங்கியபடி திரும்பினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement