dinamalar telegram
Advertisement

கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.18.15 லட்சம் கையாடல்: சங்கத்தலைவர் கைது

Share
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.18.15 லட்சம் கையாடல்செய்த வழக்கில் சங்க தலைவரை போலீசார் கைது செய்தனர். செயலாளரை தேடி வருகின்றனர்.

திருவாடானை அருகே திருத்தேர்வளை கிராமத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் செயல்படுகிறது. இதன் செயலாளராக ஆர்.எஸ்.மங்கலம் அருகேஆனந்துார் ஓடக்கரையை சேர்ந்த ஆசைத்தம்பி, தலைவராக ஆய்ங்குடி கப்பகுடியை சேர்ந்த தங்கவேல் 67, உள்ளனர்.இருவரும் சேர்ந்து 2019 ஏப்.4 முதல் 2020 ஜன.7 வரை சங்க பணத்தை கையாடல் செய்துள்ளனர்.

2020 ஜன.6ல் சங்கத்தில் வசூல் செய்த 16 லட்சத்து 83 ஆயிரத்து 318 ரூபாயை மத்திய கூட்டுறவு வங்கியில் செலுத்தாமல் கையாடல் செய்தனர். மேலும், 2 சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப் பட்ட ரூ.1 லட்சம் பயிர் கடன் தொகையை வழங்கியதாக கணக்கு எழுதி மோசடி செய்தனர். இதன்படி18 லட்சத்து 14 ஆயிரத்து 818 ரூபாய் கையாடல் செய்ததுதணிக்கையில் கண்டறியப் பட்டது.

ராமநாதபுரம் துணை பதிவாளர் கோவிந்தராஜன் இருவர் மீதும் ராமநாதபுரம் வணிக குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் நேற்று புகார் அளித்தார்.அதன்படி தலைவர் தங்கவேலை போலீசார் கைது செய்தனர். செயலாளர் ஆசைத்தம்பியை தேடுகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement