Load Image
dinamalar telegram
Advertisement

இன்ஸ்பெக்டரை மாற்ற கோரி பாஜ.,வினர் மறியல்

Tamil News
ADVERTISEMENT
கரூர்:முதல்வருக்கு நன்றி தெரிவித்து, பொது மக்களுக்கு கடலை மிட்டாய் வழங்க சென்றதை தடுத்த இன்ஸ்பெக்டரை மாற்றக் கோரி, பா.ஜ., நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுதும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோவில்களை திறக்க, தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே பா.ஜ., மாவட்ட தலைவர் சிவசாமி தலைமையில், அக்கட்சியினர் நேற்று காலை பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு கடலை மிட்டாய் வழங்கினர்.

அப்போது, டவுன் இன்ஸ்பெக்டர் செந்துார் பாண்டியன், பட்டாசு வெடிக்க விடாமலும், மிட்டாய் வழங்குவதை தடுத்ததாகவும் கூறி, பா.ஜ., வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பா.ஜ., தலைவர் சிவசாமி கூறுகையில், ''இன்ஸ்பெக்டர் செந்துார் பாண்டியன், ஹிந்து விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகிறார். அவரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும். இல்லை என்றால், விரைவில் எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement