dinamalar telegram
Advertisement

சென்னை காளிகாம்பாள் கோவிலில் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் விரட்டி அடிப்பு

Share
சென்னை:சென்னை காளிகாம்பாள் கோவிலில் தரிசனத்திற்கு வந்த பக்தர்களை, இணை கமிஷனர் விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


அதிகாரியின் செயலால் ஆன்மிக அன்பர்கள் கொதிப்படைந்து உள்ளனர்.சென்னை பாரிமுனை, தம்புச்செட்டி தெருவில் அமைந்துள்ளது காளிகாம்பாள் கோவில். காளி பக்தர்களான சத்ரபதி சிவாஜி இக்கோவிலில் தரிசித்துள்ளார். மகாகவி பாரதியார் சுதேசமித்திரனில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, இக்கோவிலுக்கு அடிக்கடி சென்று காளிகாம்பாளை தரிசித்து உள்ளார்.

பிரபல நடிகர் ரஜினி, இக்கோவில் காளியின் பக்தர். எனவே, சென்னை நகரில் பிரசித்தி பெற்றது காளிகாம்பாள் கோவில். இந்த கோவிலுக்கு நேற்று முன்தினம் இரவு அமைச்சர் சேகர்பாபு திடீரென வந்தார். அனைத்து நாட்களும், கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால், பக்தர்கள் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்துள்ள விபரம் குறித்து கேட்டறிந்தார்.

அமைச்சர் வருவதற்கு முன், அறநிலையத் துறையின் சென்னை மண்டல இணை கமிஷனர் ஹரிப்ரியா கோவிலுக்கு சென்றார். அங்கு நவராத்திரி ஹோமம் நடந்து கொண்டிருந்தது. பக்தர்கள் அதிகம் பங்கேற்று, சங்கல்பம் செய்து கொண்டிருந்தனர்.இதைப் பார்த்த ஹரிப்ரியா, கோவில் நிர்வாகத்தினரிடம், 'ஏன் இவ்வளவு பக்தர்களை அனுமதித்தீர்கள்' என்று கடிந்து கொண்டார். கூடியிருந்த பக்தர்களை அங்கிருந்து விரட்டி அடிக்காத குறையாக, சத்தம் போட்டு வெளியேற்றினார்.


நவராத்திரி ஹோமத்தில் பங்கேற்ற பக்தர்கள் பாதியிலேயே வெளியேறினர். சமூக இடைவெளி இல்லை என்று காரணம் கூறி, அறநிலையத் துறை அதிகாரி இவ்வாறு அடாவடியாக நடந்து கொண்டது, பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


இது குறித்து, ஆன்மிக அன்பர்கள் கூறியதாவது:சென்னையில் பிரசித்தி பெற்றது காளிகாம்பாள் கோவில் என்பதால், பக்தர்கள் கூட்டத்திற்கு குறைவிருக்காது. நேற்று சரஸ்வதி பூஜை என்பதாலும், விடுமுறை என்பதாலும் கூட்டம் அதிகம். சங்கல்பம் செய்ய வந்தோர் ஆர்வமுடன் கூடியிருந்தனர்.

பக்தர்களிடம் பக்குவமாக கூறி, அவர்களுக்கு இணை கமிஷனர் விழிப்புணர்வு ஏற்படுத்தி, பொறுமையுடன் எடுத்து கூறியிருக்கலாம். அதை விடுத்து பக்தர்களிடம் எரிந்து விழுந்து, விரட்டியடிப்பது போல வெளியேற்றியது தவறு தான். இது, அவர் பதவிக்கு அழகல்ல.இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து விளக்கம் பெற இணை கமிஷனர் ஹரிப்ரியாவை பல முறை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை; அவரது மொபைல் போன், 'சுவிட்ச் ஆப்' நிலையிலேயே இருந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    ஹரிப்ரியா குடும்பத்துடன் பெரும் சிறப்புடன் பெருவியாதிகளுடன் காளிகாம்பாள் அருள்புரியனும்

  • BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்

    இந்த ஹரிப்பிரியா ஒரு அறிவாலய அடிமை. உதயநிதிக்கு மிகமிக வேண்டியவர். இவையெல்லாம் டி.ஜி.பி. கண்டு கொள்ள மாட்டார். என் என்றால் மேலிடத்து கட்டளை.

Advertisement