dinamalar telegram
Advertisement

அனைவருக்கும் பட்டம் : முதல்வர் ஸ்டாலின் இலக்கு

Share
Tamil News
சென்னை :''அனைவருக்கும் அடிப்படை கல்வி என்ற இலக்கை, நாம் எளிதாக அடைந்து விட்டோம். அனைவருக்கும் ஏதாவது ஒரு பட்டம் என்ற இலக்கையும், விரைவில் அடைந்து விடுவோம்,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

சென்னை லயோலா கல்லூரியில், புதிய கட்டடத்தை திறந்து வைத்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

என் அண்ணன் அழகிரி, இந்த கல்லூரியில் தான் படித்தார். என் மகன் உதயநிதி கூட, இந்த கல்லூரியில் தான் படித்தார். இந்த கல்லூரியில் படிக்காமல் போய் விட்டேனே என்ற ஏக்கம், இப்போது எனக்கு வந்திருக்கிறது.ஒருவருடைய கல்வி, அவருக்கு மட்டுமல்ல; அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல; அவரை சுற்றி இருப்பவர்களுக்கும், நாட்டுக்கும் பயன்படுவதாக இருக்க வேண்டும்.கல்வியுடன் சமூக அக்கறையையும் ஊட்ட வேண்டும். சமூகத்தை உயர்த்துவது தான் உயர்வதற்கு வழிவகுக்கும் என, உணர வேண்டும்.


தி.மு.க., வளர்ந்ததே, கல்லூரிகளில் தான். அதனால் தான், தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், அதிகமான கல்லூரிகளை உருவாக்கி இருக்கிறோம். இப்போதும் உருவாக்கி வருகிறோம்.உயர் கல்வி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி கல்வி அதிகமாக பெருக வேண்டும். தமிழக அரசு, இந்த இலக்கை நோக்கித் தான் செல்கிறது.


அனைவருக்கும் அடிப்படை கல்வி என்ற இலக்கை, நாம் எளிதாக அடைந்து விட்டோம். அனைவருக்கும் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு என்ற இலக்கையும், விரைவில் அடைந்து விடுவோம்.அனைவரும் உயர் கல்வி கற்றவர்களாக வளர வேண்டும். அந்த இலக்கை எட்டிய, முதல் மாநிலமாக, தமிழகம் வளர வேண்டும். அதற்கு கல்வி நிறுவனங்களும,் தங்களது அறிவுப் பணியை தொடர வேண்டும். புதிய புதிய படிப்புகளை அறிமுகம் செய்ய வேண்டும்; மாணவர்களை ஈர்க்க வேண்டும்.

உலகம் முழுதும் உள்ள தொழில்களை, வேலைவாய்ப்புகளை கைப்பற்ற வேண்டும். தமிழர்கள் தங்களது அறிவால், திறமையால், கல்வியால், வேலைவாய்ப்பால், உலக அளவில் பெருமை அடைய வேண்டும்.

இந்த ஆட்சி அமைந்த நூறு நாட்களில், பல நூறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சமூக நீதி உள்ள பொருளாதார வளர்ச்சியை உருவாக்க நினைக்கிறோம். அனைத்து சமூகத்தினரையும் அரவணைத்து செல்கிற அரசாக இருக்கும். இதன் வாயிலாக, தமிகத்தை மிகச்சிறந்த மாநிலமாக மாற்றி காட்டுவோம்.இவ்வாறு, முதல்வர் பேசினார்.நிகழ்ச்சியில், உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (47)

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    நேஷனல் எடுகேஷனல் பாலிசி (NEP) என்பதனை அறிமுகப்படுத்த போறாருங்க அதனை தான் ஸ்டிக்கர் மாத்தி ஒட்டி சொல்றாருங்க

  • Sharvintej - மதுரை ,இந்தியா

    நான் கூட அணைத்து குடும்ப உறுப்பினர்களுக்கு அரசவை பட்டம் என்று நினைத்தேன்

  • s t rajan - chennai,இந்தியா

    சிவன் கோயில் நிலத்தில் அடிமாட்டு வாடகையில் இருக்கும் க்ருத்துவ கல்லூரியில் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து வக்காலத்து வாங்கும் மதச்சார்பற்ற முதல்வர் ?

  • sankaseshan - mumbai,இந்தியா

    பட்டம் பட்டம் என்று சொல்லி தம்பட்டம் அடிக்கிறார் , காகித பட்டம் கொடுப்பார்

  • GMM - KA,இந்தியா

    'அனைவருக்கும் அடிப்படை கல்வி இலக்கை அடைந்து விட்டோம்' - ஸ்டாலின். அனைவருக்கும் அடிப்படை வசதி, மருத்துவ வசதி, வீட்டு வசதி இன்னும் அடையவில்லை? என்று பொருள் கொள்ளலாம். அனைவருக்கும் பட்டம்? பட்டம் பெறப்பின், எடுபிடி வேலை செய்ய மாட்டார்கள். அந்த வேலை செய்ய யாரை நியமிப்பது? முதல்வர் தன் காரை தானே ஓட்ட வேண்டும். உலக அளவில் தொழில், வேலையை கைப்பற்றி பிழைக்க முடியுமா? அவ்வளவு உயர்ந்த பட்டமா தமிழக கல்வி துறை வழங்கும் பட்டம். கிருத்துவர்கள் ஐரோப்பிய நாடுகளில் பணி. இசுலாமிய மக்கள் அரபு நாடுகளில் பணி என்கிறது திமுக. நல்ல இலக்கு தான். கட்சி கல்வி நிறுவனங்கள் அதிகம். கல்லூரிகள் பல மூடும் நிலை. தமிழகத்தில் தனியார் கலை, மருத்துவ, பொறியியல் கல்லூரிகளை அரசுடமை அல்லது கூட்டுறவு துறை கீழ் கொண்டு வர திமுக ஆவண செய்ய வேண்டும். எல்லோரும் கற்க வாய்ப்பு இருக்கும் போது கல்வியில் இட ஒதுக்கீடு எதற்கு? அனைவருக்கும் வேலை உலக அளவில். வேலையில் இட ஒதுக்கீடு தேவை இல்லை.? கல்வி தந்தைகளை காப்பாற்ற இலக்கு.?

Advertisement