கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 11ம் தேதி, 23 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள், பாரம்பரிய மீன்பிடி தளமாக உள்ள பருத்தி துறை அருகே, 13ம் தேதி, இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர்.காரை நகர் கடற்படை தளத்திற்கு, அவர்கள் அழைத்து செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்தியா - இலங்கை மீனவர்களுக்கு இடையேயான, நீண்ட கால பிரச்னையில் உடனடியாக பிரதமர் தலையிட வேண்டும். இப்பிரச்னையை நிரந்தரமாக தீர்க்க உறுதியான வழிமுறைகளை காண வேண்டும். சிறைபிடிக்கப்பட்டுள்ள, 23 மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.
இலங்கை அதிகாரிகளிடம் இப்பிரச்னையை தீர்க்கமான முறையில் எடுத்து செல்ல, வெளியுறவு அமைச்சகத்திற்கு, பிரதமர் வலியுறுத்த வேண்டும். இப்பிரச்னையில் உரிய வழிமுறைகளை கையாண்டு, நிரந்தர தீர்வு காண வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.
PLEASE DON'T REPEAT THE SAME COMMENT