சீமைக்கருவேல மரங்களை அகற்றி சிறுதானியம் பயிரிட ஆர்வம்
சாயல்குடி : சாயல்குடி, கடலாடி சுற்று வட்டார பகுதிகளில் விளைநிலத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றிவிட்டு சிறுதானியங்கள் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பருவமழையின் தாக்கம் அடிப்படையில் 110 நாட்கள் விளையும் நெல் பயிரிடுவதைக்காட்டிலும் குறைந்த மழையிலும்,காற்றின் ஈரப்பதம், பனிக்காலங்களில் விளையும் தன்மைகொண்ட கம்பு, சோளம், குதிரைவாலி, கேழ்வரகு உள்ளிட்ட சிறு குறுதானியங்களை சாகுபடி செய்ய தயாராக உள்ளனர்.விவசாயிகள் கூறியதாவது: விளைநிலங்களில் 1 ஏக்கரில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்திருந்த சுற்றுச்சூழலை பாதிக்கும் சீமைக்கருவேல மரங்களை வெட்டி துார்பகுதிகளை இயந்திரத்தின் மூலம் முழுவதுமாக அகற்றி வருகிறோம்.
அதில் நன்கு உழவு செய்து விட்டு தற்போது பெய்துவரும் மழையின் ஈரப்பதத்தைக்கொண்டு சிறு தானியங்கள் விதைக்க உள்ளோம். கடலாடி வட்டாரத்தில் பெரும்பாலானோர் ஆர்வமாக உள்ளனர், என்றனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!