dinamalar telegram
Advertisement

பரமக்குடியில் ஆபத்தான வாறுகால்

Share
பரமக்குடி : பரமக்குடி நகராட்சி பகுதியில் இருந்து வாறுகால் வழியாக செல்லும் கழிவுநீர் சுந்தர் நகர் பகுதியில் முடிகிறது. அங்கு ஒட்டுமொத்த பிளாஸ்டிக் கழிவு தேங்கி, மிகப்பெரிய குழியாக மாறி உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட தரைப்பாலம் தொடங்கி, சுந்தர் நகர் வரை வைகை ஆற்றின் சர்வீஸ் ரோட்டோரம் வாறுகால் உள்ளது. இந்த வாறுகாலில் கழிவுநீர் செல்ல முடியாமல் ஆங்காங்கே கழிவு தேங்கி நிற்கிறது. சர்வீஸ் ரோட்டோரம் வசிக்கும் மக்கள் கொசு தொல்லையால் அவதிப்படுகின்றனர்.சர்வீஸ் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள் வாறுகால் பள்ளத்தால் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் நிலை உள்ளது.

சுந்தர் நகரை ஒட்டிய பகுதியில் வாறுகாலில் தேங்கும் கழிவுகளை மண் அள்ளும் இயந்திரம் மூலம் நகராட்சியினர் அகற்றுகின்றனர்.ஒவ்வொரு முறை கழிவை அள்ளும் போது அப்பகுதியில் மிகப் பெரிய பள்ளமாக மாறி வருகிறது. ஆகவே விபத்துகள் ஏற்படும் முன் இதனை சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement