dinamalar telegram
Advertisement

4,900 நர்ஸ்கள் விரைவில் நியமனம்

Share
சென்னை:''தமிழகத்தில், அரசு மருத்துவமனைகளுக்கு புதிதாக 4,900 நர்ஸ்கள் நியமிக்கப்பட உள்ளனர்,'' என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

சென்னையில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் அவர் அளித்த பேட்டி: ஒவ்வொரு முறையும், கொரோனா தளர்வுகளை அறிவிக்கும் போது, விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என, முதல்வர் அறிவுறுத்த தவறுவதில்லை.தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது என்பதற்காக, விதிமுறைகளை காற்றில் பறக்கவிடாமல் கடைப்பிடிக்க வேண்டும்.நான்கு மாதங்களுக்கு முன் பணியில் சேர்ந்த நர்ஸ்கள், பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதற்காக, மூன்று பேர் குழு அமைத்து, 15 நாட்களில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.போராட்டம் நடத்தியதற்கு நர்ஸ்கள் தரப்பில் இருந்து வருத்தமும் தெரிவித்தனர். தமிழகத்தில் 4,900 நர்ஸ்களை புதிதாக நியமிக்கும் பணி நடைபெறுகிறது. இதில், இவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப் படும்.இந்தியா அளவில் தடுப்பூசி போடுவதில், தமிழகம் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.


அ.தி.மு.க., ஆட்சியில், கொரோனா தடுப்பூசி பணி சரியாக நடைபெறவில்லை.தடுப்பூசிகளை வீணடித்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருந்தது.மொத்த தடுப்பூசிகளில், 6 சதவீதமான, 4.34 லட்சம் தடுப்பூசிகளை வீணடித்தனர்.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், 5.29 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 18 வயதுக்கு மேற்பட்டோரில், 67 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்னும் 10 நாட்களில் 70 சதவீதம் என்ற இலக்கை அடைவோம். இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement