dinamalar telegram
Advertisement

பொன் விழா மாநாடு: அ.தி.மு.க., ஏற்பாடு

Share
Tamil News
சென்னை ;'அ.தி.மு.க., பொன் விழா ஆண்டை ஒட்டி, பிரமாண்ட மாநாடு நடத்தப்படும்' என, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.அவர்களின் கூட்டறிக்கை:கடந்த 1972- அக்., 17ல், அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., துவக்கிய போது ஏற்பட்ட அரசியல் எழுச்சியும், புத்துணர்ச்சியும் இன்றும் தொடர்வது எல்லையில்லா மகிழ்ச்சி அளிக்கிறது.

முத்திரைஅ.தி.மு.க.,வின் பொன் விழா, ஆண்டு முழுதும் கொண்டாடப்படும். இதையொட்டி, பிரமாண்டமான மாநாடு நடத்தப்படும். பொன் விழா முத்திரை பதிக்கப்பட்ட, தங்க முலாம் பூசப்பட்ட பதக்கங்கள், கட்சி முன்னோடிகளுக்கு அணிவிக்கப்படும். கட்சி வளர்ச்சிக்காக தொண்டாற்றும் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள், கலைத் துறையினர் உள்ளிட்டோருக்கு, ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயர்களில் விருதுகள் வழங்கப்படும்.பேச்சு, கவிதை, கட்டுரை, விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, வெற்றி பெறுவோருக்கு சான்றிதழும், பரிசும் வழங்கப்படும்.'மக்கள் தொண்டில் மகத்தான 50 ஆண்டுகள்' என்ற தலைப்பில் குறிப்பேடுகள் அச்சடித்து வழங்கப்படும்.சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு, 'எம்.ஜி.ஆர்., மாளிகை' என்று பெயர் சூட்டப்படும். தலைமை நிலைய பேச்சாளர்கள் மற்றும் கலைக் குழுவினரை கவுரவித்து உதவிகள் செய்யப்படும்.ஒவ்வொரு மாவட்டத்திலும் அரங்கக் கூட்டங்கள் நடத்தி, ஆரம்ப கால உறுப்பினர்களுக்கு பொன் விழா நினைவு நாணயம்,பதக்கம் வழங்கப்படும்.

வரலாற்று நிகழ்வுஉறுப்பினர் பெயர் விபரம் எழுதப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை பற்றியும், அ.தி.மு.க., பற்றியும் நுால்கள் எழுதியுள்ள ஆசிரியர்கள் கவுரவிக்கப்படுவர்.எம்.ஜி.ஆர்., மன்றங்களில் இருந்து கட்சிப் பணிகளை துவக்கிய மூத்த முன்னோடிகளுக்கு சிறப்பு செய்யப்படும்.பொன் விழாவை பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில், காலச்சுருள் போன்ற வரலாற்று நிகழ்வுகளைக் கொண்ட விளம்பரப் படம் தயாரித்து, 'டிவி'க்களிலும், சமூக ஊடகங்களிலும் ஒளிபரப்பு செய்யப்படும்.அ.தி.மு.க., ஆட்சி மீண்டும் மலர்ந்து, மக்கள் துன்பங்கள் அகன்று, வளர்ச்சிப் பாதையில் அமைதியான தமிழகம் உருவாக சூளுரைத்து, அ.தி.மு.க., பணிகள் தொடரும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

அனுமதி கோரி போலீசில் மனுஅ.தி.மு.க., பொன் விழா கொண்டாட்டத்தை ஒட்டி, மெரினா கடற்கரையில் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலிதா நினைவிடத்தில் மலர் துாவி மரியாதை செய்ய அனுமதி கோரி போலீசில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., பாலகங்கா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள மனு:அ.தி.மு.க.,வின் பொன் விழாவை ஒட்டி, நாளை காலை 10:30 மணியளவில், சென்னை மெரினா கடற்கரையில் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் துாவி மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.இதில், பன்னீர்செல்வம், பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும். சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படும். முக கவசம் அணிந்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கி, உரிய பாதுகாப்பு தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (7 + 18)

 • Suri - Chennai,இந்தியா

  வரலாறு கானா தோல்வியுடன் இந்த விழாவை கொண்டாடும் நிலைக்கு தள்ளிய மண்புழு நாயகன் இன்னும் என்ன என்ன செய்து கட்சியை பி ஜெ பி இடம் அடகு வைப்பார்?

 • Suri - Chennai,இந்தியா

  சசி என்ன செய்யப்போகிறார் என்று திக்கு திக்கு என்று மண்புழு ஆசன எக்ஸ்பர்ட் நாயகன் தலையில் கையை வைத்து உட்கார்ந்திருப்பதை காண முடிகிறது.

 • Raj - Chennai ,இந்தியா

  ராஜ கலை முகத்தில் தெரியுது

 • BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்

  அண்ணா தி.மு.க. பொன் விழா காணும் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். தோல்வியே வெற்றிக்கு அறிகுறி என்பதை மறக்க வேண்டாம்.

  • S.Pandiarajan - tirupur,இந்தியா

   ஹி ...ஹி ...ஹி...தமாசு

 • BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்

  அய்யா பழனி பன்னிரு இருவருக்கும் ஒன்று. இந்த விழா எடுக்க வேண்டியது தான். தலைவர் உண்டாக்கி தலைவியின் கட்டுப்பாட்டில் வளர்ந்த கட்சி இருவரும் எல்லா விஷயங்களிலும் விட்டு கொடுத்து பொங்கல். ஒரு 5வருடத்திற்கு பண்ணீரிடம் ஆட்சியை கொடுத்து பாருங்கள் அம்மாவின் பாடம் அப்படியே அவரது மண்டையில் இருக்கும். எனவே பழனி சில விஷயங்களில் விட்டு கொடுக்க வேண்டும். இப்போது மூன்று துரோகிகள் வெளியில் இருந்து தி.மு.க.விடம் காசு வாங்கி கொண்டு கட்சியில் குழப்பம் உண்டாக்குகிறார்கள் கே.பழனி சாமி சசிகலா தினகரன் பெங்களூர் புகழேந்தி. இவர்கள் தான் கட்சியின் துரோகிகள். இவர்களை நம்பவே நம்பாதீர்கள் மேலும் தொண்டர்களை எப்போது விட்டு கொடுக்காதீர்கள். அம்மா எப்படி கட்சியை நடத்துங்கள். பின்னாளில் வெற்றி வரும். அதே இந்த சந்தர்ப்பவாத கூட்டணி வேண்டாம். முடிந்தால் பி.ஜெ.பி வாசன் கட்சியோடு மட்டும் கூட்டணி வையுங்கள். கண்டவுடன் கூட்டணி வைத்தால் நம்மை காலை வாரி விட தான் பார்ப்பார்கள். வாழ்க எம்.ஜி.ஆர் புகழ்.

  • Kadaparai Mani - chennai,இந்தியா

   k.C.பழனிசாமி என்பவன் மிக பெரிய துரோகி முழு நேர திமுகவிற்கு புரோக்கர் வேலை பார்க்கிறான் .அடுத்து சசி தினகரன் .பெங்களூரு ஆள் பணத்திற்கு வேலை செய்பவர் .

Advertisement