dinamalar telegram
Advertisement

சார் - பதிவாளர் பதவி: 116 பேருக்கு ரத்தாகிறது?

Share
Tamil News
சென்னை:பதிவுத் துறையில், 116 உதவியாளர்களுக்கு சார் - பதிவாளர்களாக பதவி உயர்வு வழங்கியதில் குளறுபடி நடந்துள்ளதை, நீதிமன்றம் உறுதி செய்ததால், ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 575 சார் - பதிவாளர் அலுவலகங்களில் 200க்கும் மேற்பட்ட உதவியாளர்கள், பல ஆண்டுகளாக பதவி உயர்வு இன்றி தவித்தனர்.இவர்களுக்கு, இரண்டாம் நிலை சார் - பதிவாளர்களாக பதவி உயர்வு வழங்கும் பணிகள், 2019ல் துவங்கின. அப்போது, பதவி உயர்வில் இட ஒதுக்கீடு சுழற்சி முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

புகார்இது தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இது நிலுவையில் இருந்தபோது, நிர்வாக அவசரம் காரணமாக சிலருக்கு மட்டும் பதவி உயர்வு வழங்க, நீதிமன்றம் அனுமதி வழங்கியது.இந்நிலையில், 2021 பிப்., 26ல், 116 உதவியாளர்களுக்கு இரண்டாம் நிலை சார் - பதிவாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இவர்களில், 65 பேருக்கு அதே நாளில், முதல் நிலை சார் - பதிவாளர்களாக அடுத்த பதவி உயர்வும் தரப்பட்டது.


இது, பதிவுத் துறையில் பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகுதி உள்ள பலர் ஓரம் கட்டப்பட்டு, ஒரு குறிப்பிட்ட சமுதாய பிரிவினருக்கு சலுகை வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இது குறித்து, பதிவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிலர், உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.கேள்விஇந்த வழக்கு, சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது, 'நிர்வாக அவசரத்துக்காக சிலருக்கு ம

'இதை தவறாக பயன்படுத்தி 116 பேருக்கு பதவி உயர்வு வழங்க பதிவுத் துறைக்கு யார் அதிகாரம் கொடுத்தது' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.இதையடுத்து, 116 பேரின் பதவி உயர்வை திரும்ப பெறுவது குறித்து உயரதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (7)

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  அதிக லஞ்சம் புழங்கும் துறை எதுவாக இருக்கும் என்று பேசிக்கொண்டே வந்தோம். ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக சொல்கிறார்கள். பத்தரிப்பதிவு துறை என்று ஒருவர், இல்லை இல்லை வட்டார போ வ துறை தான் என்று மற்றொருவர், கிடையவே கிடையாது காவலர் துரை என்று ஒருவர், அது வெல்லாம் வெறும் சாதாரணம் தான் வருவாய்துரை டாப் என்று மீண்டும் ஒருவர், அதையெல்லாம் விட அதிகம் இப்போது அறநிலையமாக இருக்கவேண்டும் என்று ஒரு சந்தேகம் கிளப்ப, சந்தேகமெதற்கு பொ ப துறைதான் நன்கு கல்லாகட்டும் துறை என்று முடிவில்லாமல் இத்துறையில் அதிக லஞ்சம் பெறப்படுகிறது என்று முடிவிற்கு வராமல் தடுமாறியபோது தான் ஒரு பொறி தட்டியது. அடடா இவை அனைத்துமே மாநில அரசின் கீளல்லவா இருக்கிறது என்று. வாசகர்கள் கொடுத்து என்ன? எந்த துறை உயர்ந்தது இந்த விஷயத்தில்?

 • சம்பத் குமார் -

  1). இட ஒதுக்கீடு படிப்பதற்கு மட்டும்தான் இருக்க வேண்டும். 2). வேலை வாய்ப்பில் 15 SC / ST பிரிவினருக்கும் , ஒரு சதவீதம் பிராமணர்கள் ( ஏனெனில் அவர்கள் இப்பொழுது மைனாரிட்டி போன்று வசதிவாய்ப்பு எதுவும் இன்றி உள்ளனர்)., ஊணமுற்றோர், விளையாட்டு வீரர்கள், அரசாங்க உத்தியோகத்தில் கணவனை இழந்த விதைகள் இவர்களுக்கு இரண்டு சதவீதம், ஜந்து சதவீதம் மகளிருக்கு special qutota, ஜந்து சதவீதம் வருமை கோட்டிற்கு கீழ் உள்ளோர்கள், மீதம் 70 சதவீதம் பொது இட ஒதுக்கீடில் கொண்டு வர வேண்டும். இந்த பொது இட ஒதுக்கீடில் ஆண் பெண் விகிதத்தை வேலையின் தன்மைக்கு ஏற்ப சரி விகிதத்தில் தர வேண்டும்.3). இந்த இட ஒதுக்கீடு படிப்படியாக பத்து வருடங்களில் குறைத்து 20 / 80 சதவீத அடிப்படையில் அடுத்த ஜந்து வருடங்களில் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.4). பள்ளிகளில் சாதி சான்றிதழ் தருவதை நிறுத்த வேண்டும். சாதி இங்கிருந்துதான் கலைய பட வேண்டும். மாறாக நாம் பின்னோக்கி வேறு திசைகளில் இதனை பார்க்கிறோம்.5). தகுதி அற்ற நபர்களால் மொத்த அரசாங்க நிர்வாகம் சீர் அழிந்து விட்டது.6). இது மட்டும் இல்லாமல் இது இட ஒதுக்கீடில் பயன் பெறும் மாணவர்கள் அல்லது வேலை வாய்ப்பு பெறும்வரை தங்களது தகுதிகளை வளர்த்து கொள்வதை பாதிக்கிறது.7). மேலும் இதனால் அந்த ஒட்டுமொத்த சமுதாயமும் படிக்கவோ அலல்து வேலை வாய்ப்புகான தகுதிகளை வளர்த்து கொள்வது இல்லை.8). மேலும் தற்பொழுது எல்லா பிரிவினரும் பொருளாத்தில் பின் தங்கி உள்ளனர். இட ஒதுக்கீடு அன்றைய சுதந்திரம் பெற்ற இந்தியாவிற்கு தேவைதான். ஆனால் இன்று எல்லா தரப்பட்ட மக்களும் பொருளாதார சூழ்நிலையில் சரிசமமாக உள்ளனர்.9). அதேபோல் ஒருமுறை இட ஒதுக்கீடில் பயன் பெற்றோர் அது தங்களுடைய லாரிகளுக்கு இட ஒதுக்கீடு பொருந்தாது.10). மதம் மாறியவர்கள் அதை மறைத்து இட ஒதுக்கீடில் பயன் பெற்றால் அல்லது வேலைக்கு சேர்ந்த பிறகு மாற்று மதத்திற்கு துணையாக இருப்பது தெரிந்தால் கண்டிப்பாக பணி நீக்கம் செய்ய வேண்டும்.11). மற்ற சலுகைகள் அதாவது அரசாங்க மானியங்கள் போன்றவற்றை தற்பொழுது உள்ளவாறே இன்னும் பத்து வருடங்களுக்கு நீட்டிக்கலாம்.12). புரோமசன் அதாவது பதவி உயர்வு கண்டிப்பாக தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். நன்றி ஐயா.

 • Sathiamoorthy.V - Kalpakkam,இந்தியா

  ஏற்கனவே வேறு ஒருவருக்கு விற்ற வீட்டை மறுபடியும் பதிவு பண்ணி கொடுக்கும் அதிகாரிகளுக்கு லஞ்ச லாவண்யங்கள் அதிகமாக உள்ள பதவி உயர்வுக்கு அவர்கள் கவலை படமாட்டார்கள் . புதிய ஆட்சியில் இவர்களை கையில் பிடிக்க முடியாது . கோயில்களில் சீர் திருத்தும் இவர்கள் வருவாய் துறையில் சீர் திருத்தம் செய்யட்டும் . சத்தியமாக அவர்களால் முடியாது .புதிய கட்சிகள் ஆரம்பிப் வர்கள் எல்லாம் நாமும் தி மு க மாதிரி சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும் வகையில் முன்னோடி ஆக இருப்பவர்கள் .

 • Ram - ottawa,கனடா

  எஸ் சி மற்றும் எஸ் டி பிரிவினருக்கு கொடுத்தால்தான் அவர்கள் லஞ்சம் வாங்கினால் தண்டிக்கமுடியாது , அவர்கள் சட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் பிரிவுகளை வைத்து உயரதிகரிகளையே மிரட்டுவார்கள்

 • ஆரூர் ரங் -

  அரசுப்பணியில் 99 சதவீதம் இருப்பது 5 ஆதிக்கசாதிகளும்😷 கிறித்தவர்களும்தான். SC ST பிரிவிலும்😇 கிறித்தவர்கள் பலர் இந்து என்று கூறி ஆக்கிரமித்திருக்கும் நிலை

Advertisement