dinamalar telegram
Advertisement

மனித வெடிகுண்டு தாக்குதல்: ஆப்கனில் 37 பேர் பலி

Share
காந்தஹார்:ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் ௩௭க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.


தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள காந்தகாரில் உள்ள ஷியா பிரிவினரின் மசூதியில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 500க்கும் அதிகமானோர் தொழுகையில் ஈடுபட்டுஇருந்தனர். அப்போது நான்கு பேர் அங்கு வந்தனர். இருவர் மசூதியின் வாயிலில் நின்றனர். மற்ற இருவர், தொழுகையில் ஈடுபட்டிருந்த கூட்டத்துக்குள் புகுந்தனர்.


அடுத்த நிமிடம் அந்த நான்கு பேரும், தங்கள் உடலில் மறைத்து வைத்திருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 37க்கும் அதிகமானோர் இறந்தனர்.
70 பேர் படுகாயம் அடைந்து, மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என, அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • chinnakaruppan - natham,இந்தியா

    எப்படியோ கொஞ்ச நாளில் அந்த நாடு சுத்தமாகிவிடும்.அவனுங்களே அவனுங்களை அழிச்சிக்குவாங்க.நல்ல சித்தாந்தம்.

Advertisement