dinamalar telegram
Advertisement

கோவில்களை சூறையாடியோருக்கு தண்டனை

Share
டாக்கா:நம் அண்டை நாடான வங்கதேசத்தில், ஹிந்து கோவில்கள் மத வெறியர்களால் சூறையாடப்பட்டன.


துர்கா பூஜையை சீர்குலைக்க நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், போலீசாருக்கும், வன்முறைக் கும்பலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நான்கு பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, பதற்றம் அதிகமுள்ள 22 மாவட்டங்களில் வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். வங்கதேசத்தில் சிறுபான்மை ஹிந்துக்களின் வழிபாட்டு தலங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, டாக்காவில் உள்ள தாகேஷ்வரி கோவிலுக்கு சென்று, பக்தர்களுக்கு துர்கா பூஜை வாழ்த்து தெரிவித்தார். இந்த விழாவில் ஷேக் ஹசீனா பேசியதாவது:வன்முறை சம்பவங்களை விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு காரணமானோர் ஒருவரையும் விட மாட்டோம். அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், தேடிக் கண்டுபிடித்து தண்டனை வழங்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement