dinamalar telegram
Advertisement

சிறையில் உள்ள மகனுக்கு ரூ. அனுப்பி வைத்தார் நடிகர் ஷாரூக்

Share
மும்பை:மும்பை சிறையில் உள்ள தன் மகனுக்கு, அங்குள்ள உணவகத்தில் இருந்து உணவு வாங்கி சாப்பிட பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் 4,500 ரூபாய் அனுப்பி வைத்துள்ளார்.

மும்பையிலிருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை பொருள் தடுப்பு படையினர் சமீபத்தில் சோதனை நடத்தினர். அதில் போதை விருந்தில் ஈடுபட்டு இருந்த நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யான் கான், 23, மற்றும் அவரது நண்பர்களை போலீசார் கைது செய்தனர். மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப் பட்டு உள்ள ஆர்யான் கானின் ஜாமின் மனு மூன்று முறை நிராகரிக்கப்பட்டது.


நான்காவது முறையாக விண்ணப்பித்த ஜாமின் மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் முடிவடைந்தது. 20ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளது. இதையடுத்து ஆர்யான் கான் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.குற்றவாளிகள் சிறை வளாகத்தில் உள்ள உணவகத்தில் உணவு வாங்கி சாப்பிட அதிகபட்சமாக 4,500 ரூபாய் வரை குடும்பத்தினர் பணம் தர சட்டத்தில் இடம் உள்ளது.

மேலும் கொரோனா பரவல் ஏற்பட்டதில் இருந்து வாரத்தில் இருமுறை 'வீடியோ' தொலைபேசி அழைப்பு வாயிலாக குடும்பத்தினருடன் பேசவும் கைதிகளுக்கு அனுமதி உள்ளது. இந்நிலையில் ஆர்யான் கானுக்கு அவரது பெற்றோர் 4,500 ரூபாய் பணத்தை சமீபத்தில், 'மணி ஆர்டர்' வாயிலாக சிறைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தன் தாய் - தந்தையுடன், 'வீடியோ' அழைப்பு வாயிலாக ஆர்யான் கான் நேற்று முன் தினம் பேசினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement