dinamalar telegram
Advertisement

இதே நாளில் அன்று

Share
Tamil News

அக்., 16, 1881



சிவகங்கை மாவட்டம் மகிபாலன்பட்டியில், 1881 அக்., 16ல் பிறந்தவர், மு.கதிரேசன். திண்ணை பள்ளியில் பயின்றார். இளம்பிள்ளைவாத நோயால் பாதிக்கப்பட்டார்.
அதனால் ஆசிரியர் இல்லாமலேயே, 'சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரிய புராணம், திருவாசகம், புறநானுாறு, திருக்குறள், கம்பராமாயணம்' உள்ளிட்ட இலக்கியங்களை கற்றார்.அண்ணாமலை பல்கலையில், 12 ஆண்டுகள் தமிழ் பேராசிரியராக பணியாற்றினார். நாராயண சாஸ்திரி என்பவரிடம் ஹிந்தி மொழியை கற்றார். தன் இரு மொழி புலமையால், ஏராளமான மொழிபெயர்ப்பு நுால்களை இயற்றினார். மதுரையில், நான்காம் தமிழ்ச் சங்கத்தை துவக்கி வைத்த புலவர்களில், இவரும் ஒருவர். சிறந்த சொற்பொழிவாளராகவும் இருந்தார். 'சன்மார்க்க சபை, மணிவாசக மன்றம்' ஆகியவற்றை தோற்றுவித்தார். வாழ்நாளின் இறுதிக் காலத்தில் படுத்த படுக்கையாய் கிடக்கும் போதும் திருவாசகத்திற்கு உரை எழுதினார். 1953 அக்., 24ம் தேதி தன், 72வது வயதில் காலமானார்.பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் பிறந்த தினம் இன்று!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    மஹாமஹோபாத்யாயா அதாவது ஆங்கில அரசால் பெரும்பேராசான் பட்டம் வழங்கப்பட்டவர்

Advertisement