உலகம் முழுவதும் வாழும் இந்துக்களால் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அண்டை நாடான மேற்கு வங்கத்தில் துர்கா பூஜையை சிறப்பாக கொண்டாட பல்வேறு இடங்களில் பந்தல் அமைத்து துர்கை சிலைகளை நிறுவியிருந்தனர். குமில்லா என்ற பகுதியில் துர்கா பூஜை பந்தலில் குர்ஆனை அவமதித்ததாக சமூக ஊடகங்களில் தகவல் பரப்பப்பட்டது. அதனால் கலவரம் மூண்டது. குமில்லா பகுதியில் ஏற்பட்ட கலவரம் அடுத்தடுத்த ஊர்களிலும் பரவியது. ஹிந்து கோயில்கள், துர்கா பூஜை பந்தல்கள் சூறையாடப்பட்டன. ஹிந்து குடும்பங்கள் தாக்கப்பட்டனர். கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நால்வர் இறந்ததாக கூறப்படுகிறது.

கலவரத்தை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. மேலும் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க 22 மாவட்டங்களுக்கு துணை ராணுவப் படை அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் தசாரா விழாவுக்காக டாக்காவில் உள்ள தாக்கேஸ்வரி ஹிந்து கோவில் நிகழ்ச்சி பிரதமர் ஷேக் ஹசீனா பங்கேற்றார். கலவரம் குறித்து பேசியவர் “குமில்லாவில் நடந்த சம்பவங்கள் முழுமையாக விசாரிக்கப்பட்டு வருகின்றன. யாரும் தப்ப முடியாது. அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பது முக்கியமல்ல. அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.” என்றார்.
இதே கதை தான் எப்போவும் சொல்லுவார்கள் ஒரு .... மாட்டார்கள்.. நம்ம கதையும் அப்படித்தானே.. ஹி ஹி ஹி ...