ADVERTISEMENT
புதுடில்லி: இந்தியாவை, தனது சொந்த பலத்திலேயே உலகின் மிகப்பெரிய ராணுவ சக்தியாக மாற்றுவதே இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
நாட்டின் ராணுவ தளவாடங்கள் தயாரிப்பில் சுயசார்பை மேம்படுத்தும் வகையில், 41 ஆயுத தொழிற்சாலைகள், அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் 7 பாதுகாப்பு நிறுவனங்களாக மாற்றப்பட்டு உள்ளன.
இந்த 7 பாதுகாப்பு நிறுவனங்களை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: இன்று, நாட்டின் பாதுகாப்பு துறையில், முன் எப்போதும் இல்லாத வகையில், வெளிப்படைத்தன்மை, நம்பிக்கை மற்றும் தொழில்நுட்ப பயன்பாடு அதிகம். சுதந்திரம் பெற்ற பின்னர், முதல்முறையாக முக்கிய சீர்திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது, ஒற்றை சாளர அமைப்பு பின்பற்றப்படுகிறது. சுதந்திரத்திற்கு பின்னர் ராணுவ தளவாட தொழிற்சாலைகளை நவீனப்படுத்த வேண்டும் என்ற தேவை இருந்த போதும் அதில் கவனம் செலுத்தப்படவில்லை.

‛சுயசார்பு இந்தியா' கொள்கையின் கீழ், இந்தியாவை தனது சொந்த பலத்தில் உலகின் மிகப்பெரிய ராணுவ சக்தியாக மாற்றுவதையும், நவீன ராணுவ தொழிற்சாலைகளை உருவாக்கி மேம்படுத்துவதுமே, நாட்டின் குறிக்கோளாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த 7 ஆண்டுகளில், இந்த தீர்மானத்தையும், ‛மேக் இன் இந்தியா' என்ற தாரக மந்திரத்தையும் நோக்கி தேசம் சென்றுள்ளது. புதிய எதிர்காலத்திற்காக இந்தியா உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து (51)
நாட்டின் முக்கிய பிரச்சனைகளின் , மக்களின் வாழ்வாதாரத்தில் பங்கம் விளைத்ததால் அவர்களின் கோபத்தில் இருந்து தப்புவதற்கு , திசை திருப்ப முயற்சி செய்யும் பேச்சு இது.
மிகவும் நல்ல பிரதமர் ..
ஒரு நாட்டை சீரழிக்கும் போது அதை கண்டிக்காமல் இருக்க அந்த நாட்டு மக்கள் மீது தேசிய பட்றை பற்றி திணிக்க வேண்டும் அதை மிகச் சரியாக செய்து கொண்டிருக்கிறார்கள். சில படித்த சங்கிகளும் படிக்காத முட்டாள் சங் கிகளும் இருக்கும் வரை இந்த தேசத்தை காப்பாற்ற முடியாது. கூடிய விரைவில் கோமியம் விற்பனைக்கு வரும்
வரி செலுத்தும் மக்களின் அடிப்படை தேவைகளை முதலில் நிறைவேற்றவும் . விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
ஏற்கனவே இந்திய ராணுவம் மிக பலமிக்கதாக உள்ளது.