dinamalar telegram
Advertisement

நீலகிரியில் 4 பேரை கொன்ற புலி பிடிப்பட்டது

Share
கூடலூர்: நீலகிரி மாவட்டத்தில் மசினகுடி மற்றும் கூடலூரில் 4 பேரை கொன்ற புலியை வனத்துறை அதிகாரிகள் மயக்க ஊசி செலுத்தி பிடித்து கூண்டில் ஏற்றினர்.

நீலகிரி மாவட்டம், கூடலூர், மசினகுடியில் நான்கு பேரை தாக்கி கொன்ற புலியை செப்., 25 ம் தேதி முதல் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். நேற்று, முதுமலை ஒம்பட்டா பகுதியில், புலியை தேடினர் , மாலை வரை புலி இருப்பிடத்தை கண்டு பிடிக்க முடியவில்லை.

இரவு 9:30 மணிக்கு தெப்பகாடு - மசினகுடி சாலையில் நடந்து, சென்ற புலிக்கு, கால்நடை மருத்துவ குழுவினார் மயக்க ஊசி செலுத்திய பின்னர் பிடிக்க முயன்றனர். ஆனால், மயக்கம் தெளிந்த நிலையில் புலி, அவர்களிடம் சிக்காமல் தப்பியது.

இந்நிலையில், இன்று பிற்பகலில் கூட்டுப்பாறை பகுதியில், தென்பட்ட அந்த புலிக்கு மயக்க ஊசி செலுத்தியுள்ளனர். தற்போது புதருக்குள் புலி உள்ளது. அந்த பகுதியை சுற்றி வளைத்துள்ள வனத்துறையினர், தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். புலி மயக்கமடைந்ததை தொடர்ந்து, அதனை பிடித்து கூண்டில் ஏற்றினர்.

மிகப்பெரிய சாதனைவனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது: 2014 முதல் இதுவரை ஆட்களை கொன்ற 4 புலிகள் வேறு வழியில்லாமல் சுட்டு பிடிக்கப்பட்டது. ஆனால், தற்போது பிடிபட்ட புலி, மாடுகள் மற்றும் 4 பேரை அடித்து கொன்றது. முதல்முறையாக ஆட்கொல்லி புலி உயிருடன் பிடிக்கப்பட்டது மிகப்பெரிய சாதனை. ஊசி போட்டு பிடிக்கப்பட்டது என்பது மிகப்பெரிய இலக்கு. இந்த புலியை சிகிச்சை அளித்து வண்டலூர் கொண்டு செல்ல உள்ளோம். முதல்வர் மற்றும் நிபுணர்களுடன் ஆலோசனை செய்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அனுமதி மறுப்புவனப்பகுதியில் பிடிப்பட்ட புலியை பார்க்க பத்திரிகையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் ஆளுங்கட்சி டிவி சேர்ந்தவர்கள் மற்றும் விஐபிக்கள் மட்டும் அழைத்து செல்லப்பட்டனர். இதனை கண்டித்தும் புலி உயிருடன் உள்ளதா அல்லது இல்லையா என்பதை பார்க்க அனைவரையும் அனுமதிக்க வேண்டும் எனக் கூறி வனத்துறையை கண்டித்து பத்திரிக்கையாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (6)

 • INDIAN Kumar - chennai,இந்தியா

  இந்த உலகம் அணைத்து உயிர்களுக்குமானது

 • Mohan - Salem,இந்தியா

  ஐயா ராம் அவர்களே ..மற்றும் புலிப்பாசம் மிகக் கொண்ட மனிதர்களே சற்று சக மனிதன் ..அதுவும் துரதிருஷ்ட வசமாக காட்டின் அருகாமையில் உள்ள ஊர்களில் பிறந்து வளர்ந்த ஏழைகளே உங்கள் உயிரும் வாழ்வும்....ஒரு பொருட்டல்ல...ஆட்கொல்லி புலியே முக்கியம் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்ட , ""கருணை மிக்க'""மனிதநேயமற்ற, விலங்கின விசுவாசிகளே வாழ்வாதாரத்திற்காக உயிருடன் விளையாடிக் கொண்டு நித்தமும் போராடி வரும் சக மனிதனின் கஷ்டத்தை முதலில் அறிந்து பின் புரிந்து உதவாவிட்டாலும் பரவாயில்லை வேட்டு வைக்க வேண்டாம். வனத்துறையினர் திறமையுடன் தமது கடமையை சரிவர செய்வதை தடுக்காமல் இருப்போமாக.....

 • Shake-sphere - India,இந்தியா

  இந்த புலிதான் நான்கு பேரை கொன்றது என்பதற்கு என்ன சாட்சியங்கள் உள்ளது? அந்த நான்கு பேரும் வேறு ஏதாவது காரணத்தினால் கூட இறந்திருக்கலாம் அல்லது தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எதற்கெடுத்தாலும் புலியினை காரணம் சொல்வது தவறான குற்றச்சாட்டு. புலி சுதந்திரமாக நடமாட இடமில்லாமல் அதனுடைய வாழ்விடத்தை ஆக்கிரமிப்பு செய்வது கொடூரமான செயல் புலிகள் மிகவும் சென்சிடிவ் ஆனவை. பெரும்பாலும் புலிகளுக்கு மான் கரி தான் பிடிக்கும் சிங்கத்திற்கு எருமை கரி குதிரை கரி ஆகிவை பிடிக்கும் புலி சிறுத்தை ஆகியவைகளுக்கு பாய்ந்து சென்று மானை பிடிப்பதில் அலாதி ஆர்வம் புலிகள் அவ்வாறு கடினமாக உழைத்தே உண்கின்றன அவை மனிதனை போன்று அல்ல அவை இலவசத்தில் வாழ்வதில்லை

 • சீனி - Bangalore,இந்தியா

  புலியை மயக்கி பிடிக்கிற வனத்துறை நிலைமை, கோர்ட் உத்தரவுக்கு பின் ஆட்சியில இருக்க அரசியல்வாதிங்கள நள்ளிரவுல மயங்கி இருக்கும் போது அமுக்கி கைது பண்ணுற மாதிரி தான்..... ஹாஹாஹா.... ஜோக்கு அப்பாற்பட்டு, ஏதும் சேதாரம் இல்லாமல் புலி பிடிபட்டது அனைவருக்கும் இனிமையான செய்தி தான், துர்கா பூஜையன்று அவரின் வாகனமான புலியை பத்திரமாக பிடித்ததற்க்கு வனத்துறைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். புலியும் மீண்டும் திருந்தி ஆட்களை சாப்பிடாமல், மீண்டும் மான்களை மட்டும் சாப்பிட்டு வாழ்வாங்கு வாழுமாறு வாழ்த்துவோம்.

 • அப்புசாமி -

  பின்னே என்ன? இ.பி.கோ 302 ல புலி மீது வழக்கு பதிஞ்சு தூக்கு தண்டனை இல்லே ஆயுள் தண்டனை வாங்கிக் குடுத்துருங்க. புலியை அதன் குகைக்கே சென்று நாம குடிசை போட்டுருவோம். நம்மளை புலி அடிச்சாதான் அநியாயம்.

Advertisement