கரூர் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அவதி
கரூர்: கரூர் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அமரக்கூட இடமின்றி அவதிப்படுகின்றனர். கரூர் பஸ் ஸ்டாண்டுக்கு திருச்சி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் மற்றும் மதுரை உள்ளிட்ட பகுதியில் இருந்து, 100க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தொழில் நகரமாக கரூர் விளங்குவதால், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், பொதுமக்கள் கரூர் வருகின்றனர். பஸ் ஸ்டாண்டில் பயணிகள் உட்கார கூட வசதி இல்லாமல் பல மணி நேரம் நிற்கவேண்டியுள்ளது. இட நெருக்கடியாக உள்ளதால் பகல் மற்றும் மாலை நேரத்தில் பயணிகள் கடுமையாக அவதிப்படுகின்றனர். பயணிகள் ஓய்வுக்கான பகுதிகளை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர். மழை மற்றும் வெயிலுக்காக பிளாட்பாரத்தில் ஒதுங்கும் பயணிகளை வியாபாரிகள் விரட்டுகின்றனர். எனவே, பஸ் ஸ்டாண்டில் இருக்கைகள் அமைக்கவும், சுகாதாரமான குடிநீர் வசதியை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!