வாகனம் மோதி இரவு காவலர் பலி
பள்ளிபாளையம்: வெப்படையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இரவு காவலர் பலியானார். பள்ளிபாளையம் அருகே தெற்குபாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி, 62; வெப்படையில் உள்ள நிறுவனத்தில் இரவு காவலராக பணி புரிந்தார். நேற்று முன்தினம் இரவு வெப்படை அடுத்த பாதரையில் நடந்து சென்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. பலத்த காயமடைந்து, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் உயிரிழந்தார். பள்ளிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!