Load Image
dinamalar telegram
Advertisement

" கலாசாரம், மதம், வரலாற்றை சீர்குலைக்க முயற்சி " - மோகன் பகவத்

Tamil News
ADVERTISEMENT
நாக்பூர்: ‛‛ தலிபான்கள் மாறியிருக்கலாம். ஆனால், பாகிஸ்தான் மாறப்போவது கிடையாது'' என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில், விஜயதசமியை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
பிரிவை அதிகப்படுத்தும் கலாசாரம் நமக்கு தேவையில்லை. ஆனால், நாட்டை ஒற்றுமைபடுத்தவும், அன்பை முன்னிலைப்படுத்தும் கலாசாரம் தான் நமக்கு முக்கியம். பிறந்த நாள் கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழாக்கள் போன்ற சிறப்பு பண்டிகைகளை அனைவரும் இணைந்து கொண்டாட வேண்டும்.
Latest Tamil News
நாடு பிரிவினை செய்யப்பட்டது வரலாற்றில் சோகமான நாள். இழந்த பெருமையை மற்றும் ஒற்றுமையை மீட்கவும், வரலாற்றை புதிய தலைமுறையினர் அறிந்து கொள்ளவும், உண்மையான வரலாற்றை நாம் எதிர்கொள்ளவது அவசியம். இந்திய கலாசாரத்தை மதிக்க வேண்டும். தற்போதைய இந்திய கலாசாரம், மதம், வரலாற்றை சீர்குலைக்க முயற்சி நடக்கிறது.

தலிபான்கள் வரலாறு நமக்கு தெரியும். சீனா மற்றும் பாகிஸ்தான் ஆதரவு அளிக்கிறது.தலிபான்கள் கூட மாறியிருக்கலாம். ஆனால் பாகிஸ்தான் மாறவில்லை, அது மாறாது. இந்தியா குறித்த சீனாவின் நோக்கம் மாறி உள்ளதா? நமது எல்லை பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த கொள்கையை உருவாக்குவதுடன். பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும். சமூக நல்லிணக்கத்திற்காக ஆர்எஸ்எஸ் பாடுபடுகிறது.கோவிட் 3வது அலையை எதிர்கொள்ள தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

ஓடிடி தளங்களில் எதை காட்ட வேண்டும் என்பதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. கோவிட் பரவலுக்கு பிறகு குழந்தைகளின் கைகளில் மொபைல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. இதனை தடுப்பது எப்படி? இதன் மூலம் கிடைக்கும் வருமானம் தேசவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனை கட்டுப்படுத்துவது அவசியம்.

மக்கள் தொகை கொள்கையை மீண்டும் பரிசீலனை செய்து, அடுத்து 50 ஆண்டுகளுக்கு ஏற்றவாறு புதிய கொள்கை உருவாக்கி அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Latest Tamil News
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (48)

 • RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ

  தேசவிரோத மூர்க்கர்கள் என்னென்ன பெயர்களுடன் திரிகிறார்கள், அவர்களது பிரச்சார நோக்கமென்ன, அஜெண்டா என்னென்ன, அதை எப்படியெல்லாம் நிறைவேற்ற துடிக்கிறார்கள் அனைத்தையும் இந்த செய்திக்கு வந்துள்ள கருத்துக்களை படித்தாலே புரிந்து கொள்ளலாம்

 • Sivagiri - chennai,இந்தியா

  ( பகுத்தறிவின்மையை வளர்ப்பது - போலி சமத்துவம் பேசி ஜாதியை வளர்ப்பது - நாடக காதல் - கன்வெர்ட்டிங் - போலி தமிழிஸ்ம் - என்று பல்வேறு கோணங்களில் ) ஹிந்து மதத்தையும் ஹிந்துக்களை அழிப்பது மட்டுமே எங்கள் கொள்கை . . என்று பகிரங்கமாக அறிவித்துள்ள பல பெயர் கொண்ட ஒரே கூட்டம் தமிழ்நாட்டில் இருப்பது உங்களுக்கு தெரியவில்லை போல . . . உங்களுக்கு தமிழ் தெரியாததும் - தமிழ்நாட்டில் ஹிந்தி தெரியாததும் - முழுவதும் தீயசக்திகள் கையில் உள்ள மீடியாக்கள் - இவர்களின் பெரிய பலம் -

 • CHANDRA MOHAN - ,

  well said.

 • Bala - chennai,இந்தியா

  சமூக சேவை மற்றும் சீர்திருத்தம் நில சீர்திருத்தங்களில் பங்கேற்பு நவம்பர் 1951 இல் மீரட்டில் ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வால்கரை சந்தித்த காந்திய தலைவர் வினோபா பாவே ஏற்பாடு செய்த பூடன் இயக்கத்தில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த இயக்கத்திற்கு ஆர்எஸ்எஸ் ஆதரவை அவர் உறுதியளித்தார். [193] இதன் விளைவாக, நானாஜி தேஷ்முக் தலைமையில் பல ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் இயக்கத்தில் பங்கேற்றனர். [2] ஆனால் கோல்வால்கர் மற்ற சந்தர்ப்பங்களில் பூதான இயக்கத்தை பிற்போக்குத்தனமாக விமர்சித்தார் மற்றும் "கம்யூனிசத்தை எதிர்க்கும் நோக்கத்துடன்" செயல்பட்டார். கம்யூனிசத்தின் அடிப்படை முறையீட்டை விட அவர்களை உயர வைக்கும் ஒரு நம்பிக்கையை இந்த இயக்கம் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்று அவர் நம்பினார். [182] 'சாதியில்' சீர்திருத்தம் ஆர்எஸ்எஸ் தலித்துகள் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை கோவில் உயர் பூசாரிகளாகப் பயிற்றுவிப்பதை ஆதரித்துள்ளது (பாரம்பரியமாக சாதி பிராமணர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு நிலை மற்றும் கீழ் ஜாதியினருக்கு மறுக்கப்பட்டது). சாதி அமைப்பின் சமூகப் பிரிவினையே இந்து மதிப்புகள் மற்றும் மரபுகளைக் கடைப்பிடிக்காததற்கு காரணமாகும் என்றும், கீழ் சாதியினரை இந்த வழியில் அணுகுவது பிரச்சினைக்கு ஒரு தீர்வாக இருக்கும் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். [194] தலித்துகள் கோவில்களில் வழிபடுவதைத் தடுத்த உயர் சாதி இந்துக்களையும் ஆர்எஸ்எஸ் கண்டித்துள்ளது, "கடவுள் கூட தலித்துகள் நுழைய முடியாத கோவிலை விட்டுவிடுவார்" என்று கூறினார். [195] ஜாஃப்ரெலோட் "ஆரம்பகால ஆர்எஸ்எஸ் தலைவர்களின் சமூக தோற்றம் பற்றிய புள்ளிவிவர பகுப்பாய்வை மேற்கொள்ள போதுமான தரவு இல்லை" என்று கூறுகிறார், ஆனால் சில அறியப்பட்ட சுயவிவரங்களின் அடிப்படையில், பெரும்பாலான ஆர்எஸ்எஸ் நிறுவனர்கள் மற்றும் அதன் முன்னணி அமைப்பாளர்கள், ஒரு சிலருடன் முடிவுக்கு செல்கிறார் விதிவிலக்குகள், நடுத்தர அல்லது கீழ் வகுப்பைச் சேர்ந்த மகாராஷ்டிர பிராமணர்கள் [196] அவர் இந்த வாதத்தை முன்வைத்தார், "ஆர்எஸ்எஸ் இந்த ஊனமுற்றோரை சமாளிக்க, அதன் பிராமணியம் நீர்த்துப்போகும் இன -மதரீதியான அணிதிரட்டல் கருவி நுட்பங்களை பயன்படுத்தியது". [197] இருப்பினும், ஆண்டர்சன் மற்றும் டாம்லே (1987) அனைத்து சாதியினரும் அமைப்பில் வரவேற்கப்பட்டு சமமானவர்களாக கருதப்படுகின்றனர். [2] 1934 இல் மகாதேவ் தேசாய் மற்றும் மிராபென் ஆகியோருடன் வர்தாவில் ஒரு ஆர்எஸ்எஸ் முகாமிற்கு விஜயம் செய்தபோது, மகாத்மா காந்தி கூறினார், "நான் ஆர்எஸ்எஸ் முகாமுக்குச் சென்றபோது, உங்கள் ஒழுக்கம் மற்றும் தீண்டாமை இல்லாததால் நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்." அவர் இதைப் பற்றி சுயம்சேவகர்களிடம் தனிப்பட்ட முறையில் விசாரித்தார் மற்றும் தன்னார்வலர்கள் ஒருவருக்கொருவர் சாதிகளை அறிந்து கொள்ள கவலைப்படாமல் முகாமில் ஒன்றாக வாழ்ந்து சாப்பிடுவதைக் கண்டார். [198] நிவாரணம் மற்றும் மறுவாழ்வு குஜராத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி முகாம் வட கர்நாடகா மற்றும் ஆந்திராவில் வெள்ளத்தின் போது ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர் 1971 ஒடிசா சூறாவளி, 1977 ஆந்திரப் புயல் [199] மற்றும் 1984 போபால் பேரழிவுக்குப் பிறகு நிவாரணப் பணிகளில் ஆர்எஸ்எஸ் முக்கிய பங்கு வகித்தது. [200] [201] இது 2001 குஜராத் பூகம்பத்தின் போது நிவாரண முயற்சிகளுக்கு உதவியது, மேலும் கிராமங்களை புனரமைக்க உதவியது. [199] [202] ஏறக்குறைய 35,000 ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் சீருடையில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர், [203] மற்றும் அவர்களின் விமர்சகர்கள் பலர் தங்கள் பங்கை ஒப்புக் கொண்டனர். [204] ஆர்எஸ்எஸ்-உடன் இணைந்த என்ஜிஓ, சேவா பாரதி, 2004 இந்தியப் பெருங்கடல் பூகம்பத்திற்குப் பிறகு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டது. செயல்பாடுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்குமிடம் கட்டுவது மற்றும் உணவு, உடைகள் மற்றும் மருத்துவத் தேவைகளை வழங்குதல் ஆகியவை அடங்கும். [205] 2004 சுமத்ரா-அந்தமான் நிலநடுக்கம் மற்றும் அடுத்தடுத்த சுனாமியின் போது ஆர்எஸ்எஸ் நிவாரண முயற்சிகளுக்கு உதவியது. [206] ஜம்மு -காஷ்மீரின் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 57 குழந்தைகளை (38 முஸ்லீம்கள் மற்றும் 19 இந்துக்கள்) சேவா பாரதி தத்தெடுத்தது. 1999 கார்கில் போரில் பாதிக்கப்பட்டவர்களை அவர்கள் கவனித்தனர். [209] 1984 ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் போது, முன்னாள் தேசிய சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் தர்லோச்சன் சிங் மற்றும் பிரபல பத்திரிகையாளர் & எழுத்தாளர் குஷ்வந்த் சிங் ஆகியோரின் கூற்றுப்படி, ஆர்எஸ்எஸ் ஆர்வலர்களும் சீக்கிய சமூகத்தின் உறுப்பினர்களைப் பாதுகாத்து உதவினார்கள். [210] [211] [212] [213] ஆர்எஸ்எஸ் தொண்டரால் சுனாமி நிவாரணப் பணிகள் 2006 ல் குஜராத்தின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சூரத் மக்களுக்கு உணவு, பால் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகளை வழங்குவதற்கான நிவாரண முயற்சிகளில் ஆர்எஸ்எஸ் பங்கேற்றது. மேற்கோள் தேவை வெள்ளம் வட கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்தின் சில மாவட்டங்களை பாதித்த பிறகு. [214] 2013 இல், உத்தரகண்ட் வெள்ளத்தைத் தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட அதன் அலுவலகங்கள் மூலம் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். [215] [216] இந்தியாவில் 2020 கொரோனா வைரஸ் பூட்டுதலை ஆதரித்து, ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம் பூட்டுதலின் போது இந்தியா முழுவதும் பலருக்கு முகமூடிகள், சோப்புகள் மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்கியது. [217] [218] [219] [220] [221] [222] [223 ] 2020 ஆம் ஆண்டில், ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் பெண், தனது ஹஜ் யாத்திரைக்காக all 5 லட்சம் மதிப்புள்ள தனது சேமிப்பு அனைத்தையும் ஆர்எஸ்எஸ்-உடன் இணைந்த 'சேவா பாரதி'க்கு நன்கொடையாக வழங்கினார். ஆங்கில விக்கிப்பீடியாவின் தமிழாக்கம்

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  நாட்டெ செதெச்சிட்டு பாக்கிஸ்தான பாக்றானுங்க

Advertisement