Load Image
dinamalar telegram
Advertisement

ஏன் சார் நான்கு இடத்தில் போட்டியிட்டீர்கள்... ஒரு இடத்தில் மட்டும் போட்டியிட்டிருந்தால், 100 சதவீத வெற்றி கிடைத்து இருக்குமல்லவா!

Tamil News
ADVERTISEMENT
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை: உள்ளாட்சித் தேர்தலில், மாவட்டக் குழுவில் நான்கு இடங்களில் நம் கட்சி போட்டியிட்டது. அதில், மூன்று இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம், 75 சதவீத வெற்றி பெற்றுள்ளோம்.

ஏன் சார் நான்கு இடத்தில் போட்டியிட்டீர்கள்... ஒரு இடத்தில் மட்டும் போட்டியிட்டிருந்தால், 100 சதவீத வெற்றி கிடைத்து இருக்குமல்லவா!அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு: அ.தி.மு.க., அரசு வழங்கிய பல சமூக நலத்திட்டங்களை, தி.மு.க., நிறுத்தி விட்டது. மாணவர்களுக்கு இலவச 'லேப்-டாப்' திட்டத்தை ரத்து செய்ய உள்ளது. கான்கிரீட் வீட்டில் இருந்தால், மண்டபத்தில் திருமணம் நடந்தால், இலவச தங்கம் கிடையாது என சட்டத்தை மாற்றி வருகிறது.

தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த, 500க்கும் மேற்பட்டவற்றை நிறைவேற்றினால் கஜானா காலியாகி விடும். அதை தவிர்க்க, பல நிபந்தனைகளை விதிக்கிறதோ!மாநில பா.ஜ., முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி: தி.மு.க.,வினருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால், கோவில்களை மட்டும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகின்றனர். அவர்களின் கொள்கைப்படி, கோவில்களை விட்டு வெளியேறினால், அவர்களின் கொள்கைப் பிடிப்பை பாராட்டலாம்.

கோவில்களை எதிர்த்து அரசியல் செய்பவர்கள், கோவிலை விட முடியாமல் தவிப்பது வினோதமாகத் தான் இருக்கிறது!தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா அறிக்கை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. எனவே, கொசு ஒழிப்பில் அரசு கவனமாக இருக்க வேண்டும். மேலும், பொது இடங்களில் நிலவேம்பு கஷாயம் வழங்கும் பணியை துவக்க வேண்டும்.

Latest Tamil News

டெங்கு காய்ச்சலை தமிழக அரசு கட்டுப்படுத்தி விட்டதாம்... சுகாதார அமைச்சர் சொல்கிறார். எனவே, கஷாயம் எல்லாம் வழங்க மாட்டார்கள்!
ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பேட்டி: கோவில்களில் வழிபாட்டிற்கான, 'போற்றி' பாடல்கள் அடங்கிய புத்தகங்களை வௌியிட்டுள்ளோம். முதற்கட்டமாக, 46 முக்கிய கோவில்களில் அந்த புத்தகத்தை விற்பனைக்கு வைக்க உள்ளோம்.

அதில் மறந்து போய், 'கருணாநிதியே போற்றி; ஸ்டாலினே போற்றி' என்பன போன்ற கட்சி வாசகங்களையும் சேர்த்து விடாதீர்கள்!விழுப்புரம் தொகுதி தி.மு.க., - எம்.பி., டாக்டர் செந்தில்குமார் அறிக்கை: பா.ஜ.,வுக்காவது அந்த ஒத்த ஓட்டு கிடைத்திருக்கும் நிலையில், அது கூட நமக்கு கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்படும் 'நாம் தமிழர்' கட்சி தோழர்களே கவலை வேண்டாம். சமூக வலைதள ஓட்டுகளையும், 'யுடியூப் லைக்'குகளையும் இன்னும் எண்ணவில்லை.

உள்ளாட்சி தேர்தல் முடிவு, நாம் தமிழர் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை அளித்திருப்பதாக கேள்வி. அதை விட, நடிகர் கமல் தான் ரொம்ப அதிர்ந்து போய் விட்டாராம்!Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (8)

 • Venkatakrishnan - Mumbai,இந்தியா

  திமுக ஆட்சிக்கு வந்ததனால்.. இன்னும் ஐந்து வருடங்களுக்கு கொஞ்சம் பொறுத்துதான் இருக்க வேண்டும்...

 • sundarsvpr - chennai,இந்தியா

  ஊராட்சி தேர்தலில் பாட்டாளி மக்கள் தனித்து போட்டியிட்டு இடங்கள் பிடித்தன. இவைகள் நேர் முறையில் பெற்ற வெற்றி. கூட்டணியில் வெற்றி பெற்ற துணை கட்சிகள் ஏனோதானோ வெற்றிகள் இந்த கட்சிகள் சிரஞ்ஜீவி தன்மை உடையவை . எப்போதும் சில்லறை இடங்கள் பெரும் கட்சிகள்

 • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

  இவர்கள் வாங்கிய ஓட்டுக்கள் கூட ஓத ஒட்டு கட்சி வாங்கவில்லை

 • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

  தம் தலைகளில் தாமே மண்ணை அள்ளிப் போட்டது போன்ற நிலையில்தான், தமிழக மக்களின் இன்றைய நிலை. ஐந்து காசுக்கு ஆசைப்பட்டு, ஐம்பதினாயிரம் ரூபாயை இழந்தவர் கதையாகிவிட்டது. வந்தாரை வாழவைக்கும் தமிழகம் தன்னை வாழவைக்கத் தவறிவிட்டது. திமுகவும் அதன் உபரிகளும் திருந்தும் நிலையில் இல்லை. ஆனால், அதிமுக திருந்தக்கூடியது. மக்களிடம் போய், நிலைமையை அறியவேண்டும். எங்கேயோ தவறு நடந்துவிட்டது.

 • Narayanan - chennai,இந்தியா

  இந்த உள்ளாட்சி தேர்தல் என்பதே திமுக வினரால் அவர்களுக்குள்ளே தேர்தல் எலக்ஷன் கமிஷன் துணையுடன் நடத்திக்கொண்ட தேர்தல். இந்துக்கள் அவ்வளவு சொரணைஇல்லாதவர்களாக இருக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன் . இவர்கள் இந்துக்களுக்கு எதிராக நடந்துகொள்ளும்போது உப்பிட்டு உணவருந்தும் இந்துக்கள் கண்டிப்பாக ஓட்டளித்து இருக்கமாட்டார்கள்

Advertisement