dinamalar telegram
Advertisement

அ.தி.மு.க., தலைவர்கள் அறிக்கை: அமைச்சர் பெரியகருப்பன் கிண்டல்

Share
Tamil News
சென்னை : 'குப்புற விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல, அ.தி.மு.க., தலைவர்கள் வெளியிட்ட அறிக்கை இருக்கிறது' என ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும், 28 மாவட்ட இடைத்தேர்தல் சிறப்பான முறையில், நடுநிலையோடு நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஐந்து ஆண்டு கால ஆட்சிக்கு, அங்கீகாரம் தந்து ஊக்குவிக்கும் வகையில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மகத்தான வெற்றியை மக்கள் தந்துள்ளனர்.

இதைத் தாங்கி கொள்ள முடியாமல், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், தங்களது கட்சிக்கு மக்கள் தந்த படுதோல்வியை மறைத்துள்ளனர். தேர்தல் ஆணையத்தை கொச்சைப்படுத்தி உள்ளனர்.

அ.தி.மு.க., நடத்த தவறிய உள்ளாட்சி தேர்தலை, தற்போது தி.மு.க., அரசு நடத்தி இருக்கிறது. பத்து ஆண்டுகால அ.தி.மு.க., ஆட்சியில், மாநில தேர்தல் ஆணையத்தை தங்கள் கைப்பாவையாக ஆட்டிப் படைத்த பழைய ஞாபகத்தில், இந்த கற்பனை குற்றச்சாட்டை வழங்கியுள்ளனர்.

குப்புற விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல, அவர்களது அறிக்கை இருக்கிறது. தோல்வியை ஒப்புக்கொள்ளவும், மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளவும் இருவருக்கும் மனமில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்

    10 வருடம் மக்கள் உங்களை ஓடிஏ ஓடிஏ விரட்டி விட்டார்களே அப்போ உங்கள் மீசையில் என்ன ஒட்டியது சானியா இல்லை வேறு ஏதாவதா உங்கள் தலைவனுக்கு துயிரியம் துப்பி திராணி சூடு சொரணை இன்னும் பல விஷயங்கள் இருந்தால் தனித்து நின்று போட்டியிட்டு இந்த வெற்றியை பற்றி நீ பேசினால் நியாயம். மொத்தம் பதினோரு காட்சிகளை கூட்டணி வைத்து கொண்டு அந்த கட்சிகளுக்கு பிரியாணி சாராயம் பேட்டி பெட்டியாக பணம் கொடுத்தால் மக்கள் உங்களுக்கு தான் வோட்டு போடுவார்கள். உங்களுக்கு என்ன பணத்துக்கு பஞ்சமா அது தான் கோடி கோடியாய் கொள்ளை அடித்து வைத்து இருக்கிறீர்களே. உனக்கும் உன் தலைவனுக்கும் துணிவு இருந்தால் தனியாக தேர்தலில் நின்று வென்று காட்டுங்கள். அப்புறம் பார்க்கலாம் யார் மீசையில் மண் ஓட்டுகிறது யாருக்கு மீசையே இல்லாமல் போகிறது என்று. ஜெய் ஹிந்த்

Advertisement