dinamalar telegram
Advertisement

உயிருக்கு ஆபத்தான நிலையில் நோயாளி; டாக்டர்கள் மறுவாழ்வு

Share
Tamil News
சென்னை : உயிருக்கு ஆபத்தான நிலையில் வந்த நோயாளியை, அறுவை சிகிச்சையின்றி காப்பாற்றி, ஓமந்துாரார் அரசு மருத்துவமனை டாக்டர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் கொடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யா, 49. மூன்றாண்டுகளுக்கு முன் விபத்தில் சிக்கி, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் மூளை எலும்பு உடைந்து, ரத்த ஓட்டத்தில் கசிவு ஏற்பட்டு கண்கள் சிவந்திருந்தன. பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற நிலையில், சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த, நுண்துளை இடையீட்டு கதிரியக்க சிகிச்சை நிபுணர் பெரியகருப்பன் தலைமையிலான டாக்டர்கள், பார்த்தசாரதி, சுரேஷ், பூபதி, ரமேஷ், இளவழகன் உள்ளிட்ேடார், அறுவை சிகிச்சையின்றி, தொடையில் துளையிட்டு, 'எம்போலைஷேசன்' வாயிலாக சிகிச்சை அளித்துள்ளனர்.

இதுகுறித்து, டாக்டர் பெரிய கருப்பன் கூறியதாவது:இந்த நோயாளிக்கு, உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால், பக்கவாதம், கண் பார்வை இழப்பு பாதிக்கப்பட்டு, உயிருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் இருந்தது.இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மறுநாள் அவருக்கு, 'எம்போலைஷேசன்' சிகிச்சை அளித்து குணப்படுத்தினோம்.

மருத்துவமனையின் இயக்குனர் விமலா, ஒருங்கிணைப்பு அதிகாரி ஆனந்தகுமார் ஆகியோரின் வழிக்காட்டுதலின்படி, இச்சிகிச்சையை வெற்றிகரமாக செய்ய முடிந்தது.இதுபோன்ற சிகிச்சை, தனியார் மருத்துவமனைகளில் அளிக்கப்பட்டால், 8 லட்சம் ரூபாய் வரை செலவாகும். முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக சிகிச்சை அளித்தோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • கூறமுதலீ -

    வாழ்க வளமுடன். வாழ்க பாரதம்.

Advertisement