dinamalar telegram
Advertisement

நவ., 22ல் பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்?

Share
Tamil News
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரை அடுத்த மாதம் 22ல் கூட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர் அமளி



பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 19ல் கூடியது. புதிய வேளாண் சட்டம், 'பெகாசஸ்' போன் ஒட்டு கேட்பு விவகாரம் உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி தொடர் அமளியில் ஈடுபட்டன.இதனால் கூட்டத் தொடரை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து மழைக்கால கூட்டத் தொடர் திட்டமிட்ட நாட்களுக்கு முன்னதாகவே ஆக., 11ல் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் குளிர்கால கூட்டத் தொடரை அடுத்த மாதம் 22ல் துவக்கி, டிச., 23 வரை ஒரு மாதம் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாகவே நவ., 15ல் கூட்டம் துவங்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சபைக்கு வர அனுமதி



கொரோனா தடுப்பு நெறிமுறைகள் முன்பு போல தீவிரமாக இல்லாத காரணத்தால், உறுப்பினர்கள் பரிசோதனை சான்றிதழ் இன்றி சபைக்கு வர அனுமதிக்கப்படுவர் என தெரிகிறது. மழைக்கால கூட்டத் தொடரின் போது அமளியால் சபை நடவடிக்கையை முடக்கியதை போல, குளிர்கால கூட்டத் தொடரையும் முடக்க திரிணமுல் காங்., மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

- புதுடில்லி நிருபர் -
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement