dinamalar telegram
Advertisement

தைவானில் தீ விபத்து; 46 பேர் உடல் கருகி பலி

Share
Tamil News
தைபே : தைவானில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 46 பேர் உயிரிழந்தனர்; 41 பேர் காயமடைந்தனர்.

கிழக்காசிய நாடான தைவானின் காசியுங் நகரில், வணிக வளாகத்துடன் கூடிய அடுக்குமாடி உள்ளடக்கிய குடியிருப்பு கட்டடம் உள்ளது. 13 அடுக்கு மாடிகளை உடைய இந்த கட்டடத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.தீ மளமளவென கட்டடம் முழுதும் பரவியதால், அதில் சிக்கி இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். தீயணைப்புப் படையினர், கடும் போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் 46 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்; 41 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement