dinamalar telegram
Advertisement

வங்க தேசத்தில் கோவில்கள் சூறை; துர்கா பூஜை விழாவில் வன்முறை

Share
டாக்கா : வங்கதேசத்தில் துர்கா பூஜை விழாவை சீர்குலைக்கும் நோக்கில், விஷமிகள் ஹிந்து கோவில்களை சூறையாடியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து 22 மாவட்டங்களில் வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

நம் அண்டை நாடான வங்கதேசத்தில் ஹிந்துக்கள் நவராத்திரி விழாவை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இதை சீர்குலைக்கும் வகையில் குமில்லா பகுதியில் உள்ள ஒரு கோவிலை விஷமிகள் சூறையாடினர்.

படுகாயம்இதைத் தொடர்ந்து சந்த்பூரின் ஹாஜிகன்ஜ், சட்டோகிராமின் பன்ஷ்கலி, காக்ஸ் பஜாரின் பெகுவா பகுதிகளில் உள்ள கோவில்களிலும் வன்முறை கும்பல் வெறியாட்டம் நடத்தி சிலைகளை சூறையாடியது. இது தவிர மேலும் பல இடங்களில் துர்கா பூஜை விழாக்களை தடுக்கும் முயற்சி தீவிரம் அடைந்தது.

நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த வங்கதேச அரசு, எல்லை பாதுகாப்பு படைப் பிரிவினரை, சம்பவம் நடந்த இடங்களுக்கு அனுப்பி வைத்தது. ஹாஜிகன்ஜில் அமைதியை ஏற்படுத்த முயன்ற பாதுகாப்பு படையினரை வன்முறை கும்பல் தாக்கியதை அடுத்து இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மூன்று பேர் உயிர் இழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

அவசர உத்தரவுஇதைத் தொடர்ந்து, மத விவகாரங்கள் துறை அமைச்சகம், மத வெறுப்புணர்வை கைவிட்டு அமைதி காக்கும்படி அவசர உத்தரவு பிறப்பித்தது. ஹிந்து கோவில்களில் துர்கா பூஜை விழா தடையின்றி நடக்கவும், பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், 22 மாவட்டங்களில் வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (33)

 • Madhu - Trichy,இந்தியா

  நமக்கும் இஸ்லாமியர்களுக்கும் உள்ள ஒரு மிகப் பெரிய வித்யாசம் என்னவெனில், நாம் 'ஈஸ்வர அல்லா தேரே நாம்' எனப் பிரார்த்தனை கீதம் பாடினோம் இப்போதும் பாடுகிறோம் எப்போதும் பாடத் தயாராக இருக்கிறோம் ஆனால், அவர்கள் இந்த 'ரகுபதி ராஜாராம்..' பாடலை மட்டுமல்ல, அதில் வரும் "ஈஸ்வர அல்லா தேரே நாம்' எனும் வரிகளைக் கூடப் பாட மாட்டார்கள் பாடவும் தயாரில்லை.

 • M Ramachandran - Chennai,இந்தியா

  துன்மார்க்கர்கள். இவர்கள் வம்சாவளியென துன்மார்க்கம் தான். வேறு என்ன எதிர்பார்க்க முடியும். ஊருக்கு தான் உபதேசம் உன்கில்லைடி என்பதை போல. அதற்க்கு கொடி பிடுங்கும் குணமுடைய இஙகுள்ள அரைக்கிறுக்கர்கள் அலகு நடப்பதை பற்றி கவலை படமாட்டார்கள் பயந்தாகொள்ளிகள். அவர்கள் தலைக்கு தீம்பு வந்தால் மதம் மாறவும் தயங்காத கூட்டம்.

 • Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ

  மூர்க்கத்தின் உண்மை முகம் இதுதான். மிக கொடுமையான மதமாக தனது உட்பிரிவுகளையும், மற்ற மதத்தினரையும் கொல்லும் படிக்காத காட்டுமிராண்டி கூட்டமாக உலக அழிவை நோக்கி இட்டு செல்கிறது.

 • இராமன் -

  போலி மதசார்பற்ற படையைச் சேர்ந்த ஒரு மகானும் வாய் திறக்கவில்லை. திருமா முதல் கான் ஹாசன் வரை... உலக மகா அயோக்கியன்

 • Sivagiri - chennai,இந்தியா

  கூலிபான்கள் - சிறுபான்மை ஆர்வலர்கள் - ? . . பங்களாதேசிகள் என்ன சொல்ல வர்றங்கன்னா - இந்தியாவுக்குள் பங்களாதேசிகள் நுழைவதை தடுத்தால் ஜாக்கிரதை - என்று சொல்கிறார்களோ மேற்கு வங்கத்தில் எல்லை பாதுகாப்புபடையின் அதிகார எல்லையை அதிகரித்தவுடனே மம்தாவின் பதிலடியா ? . .

Advertisement