dinamalar telegram
Advertisement

மண்ணில் புதைந்த குட்டிகள்; அபய குரல் எழுப்பி அழைத்த தாய் நாய்

Share
Tamil News
பாலக்காடு : பாலக்காடு அருகே, தன் குட்டிகள் மண்ணில் புதைந்ததால் இடைவிடாமல் அபய குரல் எழுப்பி பொதுமக்களை உதவிக்கு அழைத்த தாய் நாயின் பாசப்போராட்டத்தை பார்த்து பொதுமக்கள் கண் கலங்கினர்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கப்பூர் காஞ்சிரததாணியில், கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இங்கு அஷ்ரப் என்பவரின் வீட்டின் அருகே மேடான பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. மண் மேட்டில் அமர்ந்திருந்த நாய் மற்றும் அதன் ஆறு குட்டிகள் மண்ணில் புதைந்தன. இதை யாரும் கவனிக்கவில்லை.

இதில், தாய் நாயின் உடல் முழுதும் மண்ணில் புதைந்த நிலையில் தலைப்பகுதி மட்டும் வெளியில் நீட்டிக் கொண்டிருந்தது. தன்னுடன் பாசத்தோடு அமர்ந்திருந்த தன் குட்டி கள் காணாததை பார்த்த, தாய் நாய் பாசப்போராட்டத்துடன், இடைவிடாமல் அபய குரல் எழுப்பி மக்களை அழைத்தது.

தாய் நாயின் இடைவிடாத சத்தம் கேட்டு அப்பகுதிக்கு வந்த மக்கள், மண்ணில் புதைந்து தவித்த நாயை காப்பாற்றினர். அதன் பின் தான் தெரிந்தது அந்த நாயுடன் ஆறு குட்டி நாய்கள் மண்ணில் புதைந்திருப்பது. அந்த தாய் நாய் இடைவிடாமல் அபய குரல் எழுப்பியது, தன் குட்டிகளை காப்பாற்றுவதற்காக தான் என நினைத்து பொதுமக்கள் கண் கலங்கினர்.

ஒன்று திரண்ட அப்பகுதி மக்கள் நீண்ட போராட்டதிற்குப்பின் மண் சரிவை அப்புறப்படுத்தி இரண்டு குட்டி நாய்களை உயிருடன் மீட்டனர். நான்கு நாய் குட்டிகள் மண்ணில் புதைந்து பலியாகின. இச்சம்பவம் அப்பகுதி மக்களை கலங்கச் செய்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement