dinamalar telegram
Advertisement

ரூ.200 கோடி மோசடி வழக்கு; பிரபல நடிகையிடம் விசாரணை

Share
Tamil News
புதுடில்லி : இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மீதான பணமோசடி வழக்கில் தொடர்புடைய நடிகை நோரா படேஹி, நேற்று அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

'போர்டிஸ் ஹெல்த்கேர்' குழுமத்தின் துணை தலைவரான ஷிவிந்தர் சிங், பணமோசடி வழக்கில் 2019ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது மூத்த அதிகாரி போல் நாடகமாடி, ஷிவிந்தர் சிங்கிற்கு ஜாமின் பெற்றுத் தருவதாக கூறி, அவரது மனைவி அதிதி சிங்கிடம் இருந்து 200 கோடி ரூபாய் ஏமாற்றி பெறப்பட்டுள்ளது.

இந்த மோசடியில் ஈடுபட்ட சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத்தரகர், அந்த சம்பவத்தின்போது, டில்லியில் உள்ள ரோகினி சிறையில் தண்டனை அனுபவித்து வந்துஉள்ளார். மேலும், 21 குற்ற வழக்குகளில் சிக்கி உள்ள சுகேஷ், சிறையில் இருந்தபடி அதிதி சிங்கிடம் தொலைபேசியில் பேசி ஏமாற்றி உள்ளது அம்பலமானது.

இது குறித்து அதிதி சிங் அளித்த புகார் அடிப்படையில், சுகேஷ் சந்திரசேகர் மற்றும் அவரது மனைவி லீனா பால் ஆகியோர் டில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய பாலிவுட் நடிகை நோரா படேஹி, அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேற்று விசாரணைக்கு ஆஜரானார்.

அவரிடம் அமலாக்கத் துறையினர் துருவி துருவி விசாரணை நடத்தினர்.இந்த வழக்கில் ஏற்கனவே ஆஜரான நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசை, அமலாக்கத் துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணைக்கு அழைத்து உள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement