dinamalar telegram
Advertisement

கர்பா நடனத்துக்கு பின் கபடி; மீண்டும் சர்ச்சையில் பிரக்யா

Share
புதுடில்லி : மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே உள்ள பா.ஜ., - எம்.பி., பிரக்யா தாக்குர் கபடி விளையாடியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மஹாராஷ்டிராவின் மாலேகான் என்ற இடத்தில், 2008ல் இரு சக்கர வாகனத்தில் பொருத்தப்பட்டு இருந்த குண்டு வெடித்ததில் ஆறு பேர் பலியாயினர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

'வீடியோ'இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பா.ஜ., பெண் பிரமுகர் பிரக்யா தாக்குர், 51, ஒன்பது ஆண்டுகள் சிறையில் இருந்தார். உடல் நலக்குறைவை காரணம் காட்டி 2017ல் ஜாமின் வழங்கப்பட்டது. வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டது. மத்திய பிரதேசத்தின் போபால் தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டு லோக்சபா எம்.பி.,யாக தேர்வானார்.

உடல் நலக்குறைவினால் ஜாமின் பெற்ற பிரக்யா, போபால் மைதானத்தில் கூடைப்பந்து விளையாடும், 'வீடியோ' வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பின் திருமணம் ஒன்றில் நடனமாடிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் நவராத்திரி விழாவுக்குச் சென்ற பிரக்யா, குஜராத்தின் பாரம்பரிய நடனமான கர்பா நடனமாடினார்.
நேற்று முன்தினம் போபாலில் உள்ள காளி கோவிலுக்கு சென்றார். அருகே உள்ள மைதானத்தில் பெண்கள் கபடி விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களுடன் சேர்ந்து பிரக்யாவும் உற்சாகமாக கபடி விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

விசாரணை'உடல் நலன் சரியில்லை என பொய் சொல்லி விசாரணைக்கு கூட ஆஜராகாத பெண் எம்.பி., பொது இடங்களில் இப்படி துள்ளி குதித்து விளையாடுவது பா.ஜ., தலைமையின் கண்களுக்கு தெரியவில்லை' என, காங்., தலைவர்கள் குற்றம்சாட்டினர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (16)

 • Darmavan - Chennai,இந்தியா

  உடல் நலத்தாய் வளர்க்கவே இதை செய்கிறார் .வேலையில்லா சோம்பேறிகள் மற்ற குற்றவாளிகளை விட்டு இவள் என்ன செய்கிறாரென்பதை பூதக்கண்ணாடி மூலம் ஆராய்ச்சி செய்கிறார்கள்.கேவலானவங்கள்.மற்ற ஜாமீனில் வந்தவனெல்லாம் ஒழுங்காக இருக்கிறானா என்று ஆராயட்டும்.

 • K.n. Dhasarathan - chennai,இந்தியா

  அவர் வெளியில் கபடி ஆடவில்லை, நீதிமன்றத்திலே கபடி ஆடியுள்ளார், நீதி மன்றங்கள் மிக மென்மையாக நடப்பதே காரணம் , எங்கே சட்டங்கள் கடுமையாக உள்ளதோ அங்கேதான் குற்றங்கள் குறைவாக இருக்கும், பக்கத்திலே பாகிஸ்தானில் அதிபர் தவறு செய்தாலும், உடனே தண்டனை கிடைக்கிறது, ராணுவ ஆட்சியில் கூட. இங்கே ஒரு வார்டு கவுன்சிலைக்கூட ஒன்றும் பண்ண முடியாது, நமது சட்டமும் வளைந்து கொடுக்கும், நீதிபதிகளும் கடும் தண்டனை கொடுப்பதில்லை, ஆண்டவந்தான் கதி.

 • amudhan - chennai,இந்தியா

  2ஜி விசாரணையின் போது, தயாளு அம்மாளுக்கு அல்சைமர் எனச் சொல்லப்பட்டவர் குடும்பத்தின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதை என்ன சொல்வது?? தமிழர்கள் அதை எல்லாம் கண்டு கொள்ள மாட்டார்கள், கேள்வியும் கேட்க மாட்டார்கள். பகுத்தறிவு பூமியிது.

 • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

  அவர் அந்த ஊர் மதுவந்தி , கோர்ட்டுக்கு வரும்போது வீல் சேரில் வருவார் இங்கே இப்படி அப்புறம் எப்படி நமக்கு இவர்களை பார்த்து கடவுள் நம்பிக்கை வரும் சொல்லுங்கள் , இவர்களால் தான் கடவுள் மீது வரும் நம்பிக்கை எல்லாம் வராமல் போக சேயும் திருட்டு கூட்டம்

 • Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா

  இவர் ஒரு தண்டனை பெட்ற கைதி. ஒன்பது ஆண்டுகள் சிறையில் இறுந்துள்ளார். இவருக்கு பாஜக எவ்வாறு சீட்டு கொடுத்தது? இவர் எம்.பீ வேறு.

  • ஆரூர் ரங் - ,

   தண்டனை பெற்றிருந்தால் தேர்தலில் நின்றிருக்க முடியாது.😛 பொய் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது

Advertisement