dinamalar telegram
Advertisement

தமிழக அரசு ஊழியர் புதுச்சேரி அருகே கொலை

Share
புதுச்சேரி : புதுச்சேரி, காமராஜ் நகர் கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன், 53; புதுச்சேரி கோரிமேடு அருகே, தமிழக பகுதியான திருநகரில் வாட்டர் டேங்க் ஆப்பரேட்டராக பணியாற்றி வந்தார். ஆயுத பூஜை செய்வதற்காக, நேற்று இரவு 7.௦௦ மணியளவில், திருநகர் வாட்டர் டேங்குக்கு சென்றார் மணிவண்ணன்.


அப்போது பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்த கும்பல், மணிவண்ணனை கொலை செய்தது. ஆரோவில் போலீசார் வழக்கு பதிந்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர். புதுச்சேரி மேட்டுப்பாளையம் போக்குவரத்து முனையத்தில் என்.ஆர்.காங்., பிரமுகரும், முன்னாள் கவுன்சிலருமான மாந்தோப்பு சுந்தர், 53, என்பவர், கடந்தாண்டு கொலை செய்யப்பட்டார்.

இவ்வழக்கில், மணிவண்ணனின் மகன்கள் வினோத், சுந்தர் ஆகியோர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தனர். இதற்கு பழிவாங்கும் வகையில் தான், மணிவண்ணன் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement