dinamalar telegram
Advertisement

சில்மிஷம்: விமானப்படை அதிகாரி கைது

Share
Tamil News
ஈரோடு : ஓடும் ரயிலில் பெண் பேராசிரியையிடம் சில்மிஷம் செய்த விமானப்படை அதிகாரியை, ஈரோடு போலீசார் கைது செய்தனர்.


கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த 29 வயது கல்லுாரி பேராசிரியை, தசரா விடுமுறைக்காக, பெங்களூரில் இருந்து கோட்டயத்துக்கு ஐலண்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டார். முன்பதிவு பெட்டியில் நேற்று முன்தினம் நள்ளிரவு பயணித்தார்.

திருப்பத்துாரை கடந்து ரயில் வந்த நிலையில், அதே பெட்டியில் பயணித்த, இந்திய விமான படை ஹவில்தாரான, பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூரைச் சேர்ந்த பிரப்ஜோட் சிங், 28, பேராசிரியையிடம் சில்மிஷம் செய்துள்ளார்.

ஈரோடு ரயில்வே போலீசில் பேராசிரியை புகார் அளித்தார். பெண்கள் வன்கொடுமை சட்டத்தில், பிரப்ஜோட் சிங்கை கைது செய்து, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement