dinamalar telegram
Advertisement

மாணவன் உயிரை பறித்த நீச்சல் போட்டி

Share
Tamil News
ஓமலுார் : ஏரியில் குளித்த மாணவர்கள், நீச்சல் போட்டி நடத்தியபோது, பிளஸ் ௨ மாணவன் பலியானது சோகத்தை ஏற்படுத்தியது.


சேலம் மாவட்டம் காடையாம்பட்டி, கே.என்.புதுாரை சேர்ந்தவர் ஈஸ்வரன், 17; தர்மபுரியில் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தான்.நேற்று மதியம், 2:00 மணிக்கு, ஈஸ்வரன் நண்பர்களுடன், அருகில் உள்ள ஒரு ஏரியில் குளித்தபோது பரிதாபமாக இறந்தான்.

காடையாம்பட்டி தீயணைப்பு வீரர்கள், மாணவன் உடலை மீட்டனர். மாணவனுடன் குளித்த சக நண்பர்களிடம் தீவட்டிப்பட்டி போலீசார் விசாரித்தனர். போலீசார் கூறுகையில், 'கரைக்கு கரை யார் முதலில் தொட்டு வருவது என, போட்டி நடத்தியுள்ளனர். அப்போது ஏரி நடுவே வந்தபோது, மூச்சுத்திணறியதில் ஈஸ்வரன் நீரில் மூழ்கி இறந்துள்ளார்' என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement