dinamalar telegram
Advertisement

இளம் தம்பதி தற்கொலை

Share
கமுதி : ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கிளாமரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ், 27; ஓட்டலில் வேலை செய்தார். அதே கிராமத்தைச் சேர்ந்த தனலட்சுமி, 22 என்பவரை காதலித்து ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

இருவரின் வீட்டிலும் எதிர்ப்பு இருந்த நிலையில், பின் சமாதானம் ஆகினர். இந்நிலையில், வீட்டில் நேற்று முன்தினம் இரவு நாகராஜ், தனலெட்சுமி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். தனலட்சுமி 4 மாதம் கர்ப்பமாக இருந்தார்.தற்கொலைக்கான காரணம் குறித்து, கமுதி போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement