dinamalar telegram
Advertisement

23 மீனவர்கள் கைது

Share
Tamil News
நாகப்பட்டினம் : நாகையில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களை, எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

நாகை, அக்கரைப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் சிவகுமார், 48; சிவநேசன், 42; சகோதரர்கள். இவர்களுக்கு சொந்தமான இரண்டு விசைப் படகுகளில், 11ம் தேதி 23 மீனவர்கள், ஆழ்கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்றனர்.நேற்று அதிகாலை, இலங்கை, காங்கேசன் துறைமுகத்தில் இருந்து 40 கடல் மைல் தொலைவில், இலங்கை கடற்படையினர் இரு படகுகளையும் பிடித்தனர்.

படகில் இருந்த 23 மீனவர்களையும் கைது செய்து, யாழ்ப்பாணம் மீன்வளத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.'படகுகளையும், மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அக்கரைப்பேட்டை மீனவர்கள், நாகை கலெக்டர் அலுவலகம் மற்றும் மீன்வளத் துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement