dinamalar telegram
Advertisement

மொபைல் கேம்ஸ் மூலம் ரூ.94 ஆயிரம் அபேஸ்

Share
Tamil News
தஞ்சாவூர் : தஞ்சாவூரில் பட்டதாரி வாலிபரிடம், மொபைல் கேம்ஸ் வாயிலாக 94 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.


தஞ்சாவூர், அற்புதாபுரத்தைச் சேர்ந்தவர் ஜெரால்டு, 27; இன்ஜினியரிங் முடித்து, சென்னையில் உள்ள ஐ.டி., நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.தற்போது, வீட்டில் இருந்தபடி வேலை பார்த்து வரும் இவர், கடந்த 11ம் தேதி, மொபைல் போனில் வங்கிக் கணக்கு எண் விபரங்களை கொடுத்து, 'பொருட்களை விற்பனை செய்யும் கேம்ஸ்' விளையாடியுள்ளார்.

இரண்டு முறை பணத்தை செலுத்தி விளையாடிய போது, அவரது வங்கி கணக்கில் பணம் 'கிரெடிட்' ஆகியுள்ளது. மூன்றாவது முறையாக, ஐந்து பொருட்களுக்கான விலை, 93 ஆயிரத்து 958 ரூபாயை அனுப்பி, விளையாடி வெற்றியும் பெற்றுள்ளார்.ஆனால், அதற்கான பணம் 'கிரெடிட்' ஆகவில்லை. அதற்கு பதிலாக, 'நீங்கள் கடைசி விளையாட்டை கால தாமதமாக முடித்துஉள்ளீர்கள்.

'அதனால், லட்சம் ரூபாய் செலுத்தி, நான்காவது கட்ட விளையாட்டை துவங்கினால், அதற்குரிய பணத்துடன், மூன்றாவது கட்ட விளையாட்டுக்கான தொகையும் சேர்த்து வழங்கப்படும்' என எஸ்.எம்.எஸ்., வந்துள்ளது.இது ஏமாற்று வேலை என்பதை உணர்ந்த ஜெரால்டு, 'சைபர் கிரைம்' போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement