dinamalar telegram
Advertisement

இருளில் மூழ்கும் பாம்பன் பாலம்

Share
Tamil News
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலம் இருளில் மூழ்கியுள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

பாம்பன் கடல் மீது அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை பாலம், ராமேஸ்வரம் தீவை இணைக்கும் மற்றொரு பாலமாகும். இதன் வழியாக ராமேஸ்வரத்திற்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. எப்போதும் போக்குவரத்து இருக்கும் என்பதால் 2014 முதல் 2.5 கி.மீ., நீளமுள்ள பாலத்தின் இருபுறமும் 428 மின்விளக்குகள் அமைத்து இரவில் மின்னொளியில் ஜொலித்தது.


ஆனால் காலப்போக்கில் மின் விளக்குகள் பழுதாயின. சீரமைக்க தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் முன்வராததால் தற்போது அவை எரியாமல் இருளில் மூழ்கி கிடக்கிறது.இதனால் இரவில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் மக்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்வதாக அச்சப்படுகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement