dinamalar telegram
Advertisement

செஸ், சீட்டு விளையாட்டுகளில் புதுமை; கணிதம், ஆங்கிலம் கற்கும் சிறுவர்கள்: தேனி தையல் கலைஞரின் புது கண்டுபடிப்பு

Share
Tamil News
தேனி : கொரோனா பரவல் ஒன்றரை ஆண்டாய் பள்ளிகளை முடக்கியது. துாங்கும் நேரம் போக சிறுவர்-சிறுமிகள் அலைபேசியில் மூழ்கினர். அவர்களை மீட்டு கணித அடிப்படையான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தலையும், ஒன்று முதல் ஒன்பது எழுத்துக்கள் கொண்ட ஆங்கில வார்த்தைகளையும் அறிந்து கொள்ள தேனி அல்லிநகரம் மச்சாள்தெரு தையல் கலைஞர் ஆர்.முருகன் முடிவு செய்தார். இதற்காக புதுமையான செஸ், சீட்டு விளையாட்டுகளை கண்டுபிடித்து சிறுவர், சிறுமிகளுக்கு பயிற்சி வழங்குகிறார்.

'செஸ்' கணிதம்



அதுபற்றிய விவரம் வருமாறு: கணிதத்தின் அடிப்படை என்பது கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தலாகும். இதை சிறுவர், சிறுமிகள் எளிதாக புரிந்துகொள்ள முருகன் புதுமையான 'செஸ் போர்டு' உருவாக்கி உள்ளார். அதில் 45 கட்டங்கள் உள்ளன. போர்ட் நடுவிலுள்ள 25 கட்டங்களில் மட்டுமே காயின் நகர்வு இருக்கும். அதற்கு வெளியே 20 கட்டங்களில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தலுக்கான விடைகள் 1 முதல் 100 வரையில் இடம்பெற்றிருக்கும்.ஒரு போட்டியாளருக்கு 5 காயின்கள். 2 பேருக்கு மொத்தம் 10 காயின்கள்.


இருவருக்கும் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தலுக்கு தலா ஒரு காயின்களும், அனைத்து பயன்பாட்டு குறியீடுகளுக்கான இரு காயின்களும் இருக்கும். காயின் நகரும் முறைகள்(படத்தில் உள்ள முறைப்படி) தனியாக வரையறுக்கப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு கற்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு நகர்வும் கூட்டல், கழித்தல் அல்லது பெருக்கல், வகுத்தல் பயன்பாடுகளில் மேற்கொள்ள வேண்டும் என்பது விதிமுறை. இதனால் சிறுவர், சிறுமிகள் விளையாடிக் கொண்டே வகுத்தல், பெருக்கல் பயன்பாடுகளை எளிதாக கற்றுக் கொள்கின்றனர்.


இதேபோல் செஸ் உபகரணத்தில் 81 கட்டங்களை உருவாக்கி, எளிதாக ஆங்கில வார்த்தைகளை கற்பிக்கிறார். இதையும் சிறுவர் - சிறுமிகள் விரும்பி விளையாடுகின்றனர்.

'சீட்டு' விளையாட்டில் ஆங்கிலம்



'சீட்டு' விளையாட்டில் மொத்தம் 54 சீட்டுக்கள் பயன்படுத்தப்படும். ஆனால் நபருக்கு 13 சீட்டுக்கள் என 26 சீட்டுக்களுடன் 2 ஜோக்கர் சீட்டுகள் சேர்த்து 28 சீட்டுக்களுடன் ஆங்கில வார்த்தைகள் கற்பதற்கான போட்டியை முருகன் உருவாக்கியுள்ளார்.


ஒன்று முதல் ஒன்பது எழுத்துக்களை உள்ளடக்கிய ஆங்கில வார்த்தைகள் வரும்படி சீட்டுகளை வரிசைப்படுத்தி எதிராளியை வீழ்த்த வேண்டும். இந்த சீட்டு விளையாட்டுக்கும் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக பெற்றோர்கள் இந்த விளையாட்டு பொருட்களை வாங்கி பிள்ளைகளுக்கு கொடுத்து அலைபேசி மூழ்குவதை தடுக்கின்றனர்.

அரசின் உதவி தேவைமுருகன் கூறியதாவது: சிறுவர், சிறுமிகளுக்கு கணிதம் தெரிவதுடன், ஒன்பது எழுத்துக்களில் உள்ள 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆங்கில வார்த்தைகளை விளையாட்டின் மூலம் புரிந்து கொள்ள இந்த விளையாட்டுக்கள் பேரூதவியாக உள்ளன. அரசின் உதவி இருந்தால் அதிக மாணவர்களுக்கு பயிற்சி வழங்கலாம், என்றார்

கணிதம் எளிமை, ஆங்கிலம் மேம்படும்



தேனி நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆறாம் வகுப்பு மாணவி ஷிவானி 11, கூறுகையில், ''கணிதத்தில் வகுத்தல், பெருக்கல் சிரமமாக இருந்தது. இந்த விளையாட்டு மூலம் எளிமையாகி உள்ளது” என்றார்.

ஏழாம் வகுப்பு மாணவி சுவாதி 12, கூறுகையில், “விளையாட்டுக்காக 9 எழுத்து புது வார்த்தைகளை தெரிந்து கொள்ள 'ஆங்கில அகராதி' (டிக் ஷனரி) வாங்கி பயன்படுத்தி வருகிறேன். புதுப்புது ஆங்கில வார்த்தைகள் கற்பதோடு எதிராளியை வெற்றி கொள்கிறேன். விளையாட்டோடு ஆங்கிலம் கற்றதால் 600க்கும் மேற்பட்ட வார்த்தைகள் நினைவில் உள்ளன. மேலும் பள்ளி பாடங்கள் எளிதாக புரிகின்றன,” என்றார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement