dinamalar telegram
Advertisement

கணவன், மனைவி தற்கொலை

Share
Tamil News
கமுதி : ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கிளாமரம்கிராமத்தை சேர்ந்த நாகராஜ் 27, ஓட்டலில் வேலை செய்தார். இவர் அதே கிராமத்தை சேர்ந்த தனலெட்சுமியை 22, காதலித்து 6 மாதத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டார். இருவரின் வீட்டிலும் முதலில் எதிர்ப்பு இருந்த நிலையில் பின்னர் சமாதானம் ஆகினர்.

இந்நிலையில் வீட்டில் நேற்று முன் தினம் இரவு நாகராஜ்,தனலெட்சுமி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். தனலெட்சுமி 4 மாதம் கர்ப்பமாக இருந்தார். தற்கொலைக்கான காரணம் குறித்து கமுதி போலீசார் விசாரிக்கின்றனர். பரமக்குடி ஆர்.டி.ஓ., முருகன் குடும்பத்தினரிடம் விசாரித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • guru - thiruvallore,ஆஸ்திரேலியா

    கொலையை தற்கொலைன்னு போட்டுஇருக்கீங்க...

Advertisement